முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்      அரசியல்
Durai-Murugan 2024-12-10

சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மு.பெ.சாமிநாதன் மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். இப்போது குணம் அடைந்து விட்டேன். இதனால் கட்சிப் பணியையும் தொடங்கிவிட்டேன். வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து