எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச. 25 - கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்த விபரம் வருமாறு:_
தி.மு.க. தலைவர் கருணாநிதி:_
மண்ணில் மனிதநேயம் தழைக்க, "அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர் வாதம் செய்; உன்னை வெறுப்பவர்க்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று" என அன்பையும், பொறுமையையும் போதித்த இயேசு பெருமான் பிறந்த டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இயேசு நாதரை எண்ணும்போதே, அவரது கோட்பாடுகளைப் பரப்ப வந்த அயல்நாட்டுக் குருமார்களால் தமிழும், தமிழகமும் பெற்ற பெருமையை எவரும் மறந்திட இயலாது.
இத்தாலி நாட்டில் இருந்து வந்து தமிழ்த்துறவியாக வாழ்ந்து, "தத்துவ போதகர்" எனத் தம் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மொழியின் உரைநடைக்கு உயிர் தந்த இராபர்ட் டி நொபிலி!
அதே இத்தாலியில் இருந்து வந்து கிருத்தவத் தொண்டுகளுடன் ஏசுநாதரின் வரலாறு கூறும், "தேம்பாவணி"; தமிழுக்கு அகராதிக் கலையை அறிமுகப்படுத்திய, "சதுரகராதி" உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் படைத்த வீரமாமுனிவர்!
ஜெர்மானிய நாட்டிலிருந்து வந்து தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக் கூடத்தையும், பொறையாற்றில் காகித ஆலையையும் நிறுவி "தமிழ் இலத்தீன் அகராதி", "பைபிள்" தமிழ் மொழிபெயர்ப்பு முதலான நூல்களையும் படைத்த சீகன் பால்க் அய்யர்!
இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்து சமயப் பணிகள் ஆற்றியதுடன், "திருக்குறள்", "திருவாசகம்", "நாலடியார்" ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு; தம் தாயகம் திரும்பிய பின் வெளியுலகுக்குத் தமிழின் மேன்மையைப் புலப்படுத்தி, "நான் ஒரு தமிழ் மாணவன்" எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யு.போப்!
அயர்லாந்து நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து நெல்லைச் சீமையில் தங்கி, "திருநெல்வேலி சரித்திரம்" எனும் ஆங்கில நூலுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட திராவிட மொழிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் அரிய நூலையும் படைத்து; தமிழ் மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டியதுடன் தமிழைச் செம்மொழி என முதன்முதல் பறைசாற்றிய மாமேதை கால்டுவெல்! போன்றோர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய மகத்தான தொண்டுகள் எல்லாம் என் நெஞ்சில் கிளர்ந்து எழுகின்றன.
அதே வேளையில், தம் உன்னதமான தொண்டுகளால் தமிழுக்கு வளம் சேர்த்த இம்மாமேதைகளில் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் 1968ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது சிலை எடுத்துச் சிறப்பித்ததையும், திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் தங்கிச் சமயப் பணிகள் ஆற்றிய கால்டுவெல் அவர்கள் வாடிநந்த இல்லத்தைப் புதுப்பித்து, 2011 பிப்ரவரி திங்களில் நினைவு இல்லமாகத் திறந்து வைத்துப் பெருமைப்படுத்தியதையும்; கிருத்துவ சமயம், தொண்டு சமயம் என்பதைத் தம் வாழ்க்கை மூலம் புலப்படுத்திய கருணையின் வடிவம் அன்னை தெரசா அவர்களைப் போற்றி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்திற்கு "அன்னை தெரசா மாளி+கா எனப் பெயர் சூட்டிப் பெருமைப் படுத்தியதையும் நினைவு கூர்ந்து கிறிஸ்துவ சமுதாய உடன் பிறப்புகள் அனைவருக்கும் எனது கிருஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மத்திய மந்திரி ஜி.கே.வாசன்:_
அன்பு பாராட்டுதல், அனைவரையும் நேசித்தல், ஏழைகளுக்கு உதவுதல், எல்லோரையும் ஒன்றாகப் பாவித்தல், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகிய உயர் பண்புகளைத்தான் ஏசுபிரான் உலக மக்களுக்கு போதித்தார். எதனைப் போத்திதாரோ அதன்படியே வாழ்ந்து காட்டிய புனிதர் அவர். அவரது தூய்மையான எண்ணங்களும், மக்கள் துயர் துடைக்கும் செயல்களும் என்றும் உலகுக்குப் பாடமாக அமைகின்றன. அவர் காட்டிய அன்பு வழியில் நடந்தால், அனைவரையும் ஒன்றாக நேசிக்கும் பண்பை வளர்த்தால், உலகில் அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உயர்வும் நின்று நிலைக்கும். அகவே அவர் காட்டிய அன்பு வழியில் அற வழியில் நடக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
கிறிஸ்துமஸ் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்நாளில் "மத நல்லிணக்கம் வளர வேண்டும். மனித நேயம் மலர வேண்டும். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்" என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:_
பகைவனையும் மன்னிக்கும் உயர்ந்த பண்பு வேண்டும் என்றும், மனிதருள் அனைவரும் சரிநிகர்தான் என்றும் அன்பும், பாசமும் தான் மகிழ்ச்சிக்கு அடித்தளம் என்றும் அவர் போதித்த மலைப் பிரசங்கம் உலகுக்கு ஒளியாய் விவிலிய புனித வேத நூலில் இடம் பெற்று திகழ்கின்றன.
அவ்வாறு அவர் அருளிய அற்புதமான அப்போதனைகளை நாம் மனதில் ஏற்பதன் மூலம் நாட்டில் வன்முறை ஒழிந்து, அமைதி, சமாதானம் மேலோங்கிடவும், அனைவரிடையேயும் அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி பெருகிடவும் சாதி, மத, இன பிரிவுகள் மறைந்து நல்லிணக்கம் மேம்படவும் வாழ்ந்து உயர்வோம்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:_
உயர்ந்த லட்சியங்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கு, சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக்கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், விவிலியத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளான, "அவர் நியாயத்துக்கு வெற்றி கிடைக்கப் பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் என்ற சொற்களை, மந்திரச் சொற்களாக மனதில் கருதி, தமிழ்நாட்டின் மறு மலர்ச்சிக்கும், தமிழ் <ழ விடியலுக்கும் உறுதி எடுப்போமாக!
அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களாகிய கிறிஸ்துவப் பெருமக்களுக்கு, ம.தி.மு.க. சார்பில் மனமகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் :_
கிறிஸ்துமஸ் விழாவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், உற்றார், உறவினர்களோடும், நண்பர்களோடும் இணைந்தும் கொண்டாடிட வேண்டுகிறேன்.
உலகில் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி, எல்லோரும் இன்புற்றிருக்க அன்பை போதித்தவர் இயேசு கிறிஸ்து. அவர் தன் உயிரையே மக்களுக்காக தியாகம் செய்யும் அளவுக்கு மக்களை நேசித்தார். கொள்கை வடிவிலான வாழ்க்கையை ஏழை மக்களாலும் வாழ முடியும் என்பதை இந்த சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டவே அவர், தான் பிறப்பதற்கு மாட்டுக் கொட்டிலை தேர்வு செய்தார். ஏழை எளிய மக்கள் என்றில்லாது அனைத்து கிறிஸ்துவ மக்களும் அவர் போதனையை ஏற்று கடைப்பிடித்து வருகிறார்கள்.
மக்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சூழ்நிலையில் கிறிஸ்துமஸை கொண்டாடுவது ஏழை எளிய மக்களுக்கு கஷ்டம்தான் என்றாலும், வருடத்தில் ஒருமுறை கொண்டாடுகிற இவ்விழாவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், உற்றார், உறவினர்களோடும், நண்பர்களோடும் இணைந்தும் கொண்டாடிட வேண்டுகிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் ஆர்.சரத்குமார்:_
இது பரிசுப் பொருட்களை வழங்கும் நிகழ்வு மட்டுமல்ல. அனைவரையும் மகிழவைப்பது நமது வாழ்தலின் மூலம் இறைவனது இருப்பை நிரூபிப்பது. அன்பெனும் இழையால் உலக மக்களை உறுதியாக இணைத்திருக்கும் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய இயேசுபிரான் அவதரித்த நன்னாள் இது.
வெறுப்பைக் காட்டாமல் விட்டுக் கொடுத்தல் மூலமாக சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் காணலாம். சமாதானத்தையும், சந்தோசத்தையும் பேணலாம் என்று மனித இனம் பின்பற்றி வாழ வேண்டிய அழியாத தத்துவ உண்மையைப் போதித்த இயேசுவைப் போற்றிக் கொண்டாடும் நன்னாள். இந்த நன்னாளில் என் அன்பான நல்வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்:_
"சூரியன் அழிந்தாலும் பூமி அழிந்தாலும் என் வார்த்தைகள் அழியாமல் வல்லமையோடு இருக்கும்" என்று இயேசு பெருமான் தன் கருத்தின் மீதும் சொற்களின் மீதும் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அதனடிப்படையில் இன்று உலகமே போற்றும் மகானாய் இயேசு பெருமான் விளங்குகிறார். அவருடைய சொற்கள் மனித சமூகத்தை வழிநடத்துகின்றன.
இயேசுபெருமானின் வழிகாட்டுதலின்படி அன்பையும் அறத்தையும் ஏற்போம்! மனிதநேயத்தைப் போற்றுவோம்! தனி மனித அமைதி, சமூக அமைதி மற்றும் பொது அமைதியை நிலைநாட்டுவோம்! வெறுப்பை விதைத்து பகையை மூட்டி ஆதாயம் தேடும் தற்குறிகளைக் காலம் அம்பலப்படுத்தும் எனும் நம்பிக்கையோடு இயேசு பெருமான் காட்டிய வழியில் மனிதநேயத்தை மேம்படுத்த உறுதியேற்போம்! என யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுப்பதோடு, அவர் பிறந்த இந்த நாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 May 2025- மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனத்திலும், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கருடாரூடராய் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல்.
-
இன்றைய ராசிபலன்
12 May 2025 -
இன்றைய நாள் எப்படி?
12 May 2025