முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலை கோயிலில் 12,000 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை,மே.22 - திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் சார்பில் 6 வது கட்ட இலவச திருமண விழா நடைபெற்றது.  ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 284 இடங்களில் நடந்த இந்த விழாவில் ஒரே நாளில் 12 ஆயிரம் ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் மணமக்களுக்கு தாலி, மெட்டி, பட்டுப்புடவை உள்ளிட்ட சீர் வரிசைகளோடு ஏழுமலையானின் பிரசாதமும் வழங்கப்பட்டது. மணமக்கள் சார்பில் 60 பேருக்கு இலவச விருந்தும் அளிக்கப்பட்டது. 

ஐதராபாத் லலித் கலா தோரணத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமை வகித்து ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 257 ஜோடிகள் கலந்து கொண்டு இலவச திருமணம் செய்து கொண்டனர். இலவச திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் திருமலையில் பெருமாளை வழிபட கல்யாண உற்சவ கட்டண சேவையும், தலா 6 பேருக்கு இலவச வழிபாட்டு அனுமதியும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago