முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக் 20 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் அன்று மாலையே தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். பெங்களூரிலும் சரி, சென்னையிலும் சரி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவை வழிநெடுகிலும் மலர் தூவி வரவேற்றனர். அவர்களுக்கு வணக்கம் செலுத்தியவாறே ஜெயலலிதா போயஸ்கார்டனை சென்றடைந்தார். அங்கும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள் வாழ்த்து கோஷமிட்டு அவரை வரவேற்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா இல்லம் திரும்பியதற்காக அவரது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலயங்களில் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். சிறப்பு வழிபாடு நடத்தி இறைவனுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். இதற்கிடையில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து தலைவர்கள் மற்றும் பலர் கடிதம் எழுதி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் என தமிழக மக்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

தாங்கள் மீண்டும் போயஸ்கார்டன் திரும்பியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், அமைதியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன். மீண்டும் உங்களுக்கு நல்ல நேரம் ஏற்படவும் இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு எழுதியுள்ள ரஜினி, ஜெயலலிதாவுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago