முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை கோயிலில் நித்யானந்தா தரிசனம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை,ஆக.19 - திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நித்யானந்தா திடீரென நேற்று சாமி தரிசனம் செய்தார். ரகசியமாக அங்கு வந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் மேலாளர் இந்திரஜித் மகன் திருமணம் நேற்று நடைபெற்றது. இதற்கு நித்யானந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. நித்யானந்தா திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை வந்தார். நேற்று அதிகாலை திடீரென அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மூலவர் சன்னதியில் அவர் ஆழ்ந்த பக்தியுடன் தரிசனம் செய்தார். காலை 6.30 மணிக்கு பிறகு கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றார். நித்யானந்தா மீதான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் ரகசியமாக அவர் வந்து சாமி தரிசனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நித்யானந்தா வருகை தெரிந்தால் ஏராளமானோர் திருவண்ணாமலை குவிந்திருப்பார்கள். எனவேதான் சாமி தரிசனம் செய்வது ரகசியமாக வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago