முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவில் திருத்தம் கொண்டுவர பரிந்துரை

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, செப்.6 - லோக்பால் மசோதாவில் சில திருத்தங்களை கொண்டுவர நாடாளுமன்ற குழுவுக்கு பரிந்துரைக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவெடுத்துள்ளது. ஊழலில் ஈடுபடுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் லோக்பால் அமைப்பை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ஊழல் வழக்குகளை கையாளுவதில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை லோக்பால் அமைப்புக்கும் வழங்கும் விதத்தில் மசோதா கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஊழல் வழக்குகளை கையாள்வதில் லோக்பால் அமைப்புக்கும், ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கும் இடையே சிக்கல் ஏற்படலாம் என்று ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தடுக்கும் பொருட்டு லோக்பால் மசோதாவில் இப்போதே திருத்தம் செய்வது அவசியம் என்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்த தங்களது பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகி தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago