முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ. விசாரணை கோரி மனு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், அக். 19 - பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரி மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மனைவியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ். விஜயலெட்சுமி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 1995 ம் ஆண்டு முதல் 2004 வரை முதல்வராக இருந்த போது தனது ஆதாயத்துக்காக நிர்வாக அமைப்பை சந்திரபாபு நாயுடு சீர்குலைத்தார் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பல்வேறு முறைகேடுகள், மோசடிகளை குறிப்பிட்டு விஜயலெட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது மனுவுடன் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை இணைத்திருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மனுவில் குறிப்பிடப்பட்ட சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு ஆகியவை விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி புவனேசுவரி, மகன் வெங்கடேஷ் ஆகியோர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு ஆகியவை பதிலளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை தெலுங்கு தேசம் கட்சி மறுத்துள்ளது. 

சந்திரபாபு நாயுடு மீது இப்போது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்கனவே கூறப்பட்டவைதான். அவையனைத்தையும் பல்வேறு நீதிமன்றங்கள் முன்னரே நிராகரித்திருக்கின்றன. உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியாததால் புகார் மனுக்களை மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி திரும்பப் பெற்றுக் கொண்டார் என்று தெலுங்கு தேச கட்சியை சேர்நத எம்.எல்.ஏக்கள் பையாவுலு கேசவ், லிங்கரெட்டி ஆகியோர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago