எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாமக்கல் நவ.14குமாரபாளையத்தில் உள்ள கல்வி அறக்கட்டளையில் ரூ.20 கோடி மோசடி நடந்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜே.கே.கே.நடராஜா தொழில் அதிபர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உறவினர் மகள் செந்தாமரை என்பவரை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து வளர்த்தனர். தொழில் அதிபர் நடராஜா 1969 ல் ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையை தொடங்கினார். அதன் மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையை தனக்கு பிறகு தனது மனைவி தனலட்சுமி நிர்வகிக்க வேண்டும் என்று நடராஜா பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 1995 ஆம் ஆண்டு நடராஜா இறந்துவிட்டார். அதன்பிறகு அறக்கட்டளையின் வாரிசு நான் தான் என்று செந்தாமரை அறிவித்தார். இதனால் நடராஜாவின் மனைவி தனலட்சுமிக்கும், வளர்ப்பு மகள் செந்தாமரைக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் உதவியோடு செந்தாமரை இந்த அறக்கட்டளையை தன்வசமாக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து பல முறை கடந்த தி.மு.க.ஆட்சிகாலத்தில் தனலட்சுமி போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் அமைச்சராகவும் இருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது.நானும் எனது கணவரும் கூட்டாக சேர்ந்து 1969 ல் ஜே.கே.கே.ரங்கம்மாள் சாரிடபிள் டிரஸ்ட் தொடங்கினோம். அதன் மூலம் பல பள்ளி,கல்லூரிகளை நடத்தி வந்தோம்.கடந்த 1995 ல் எங்கள் வளர்ப்பு மகள் செந்தாமரையும், அவரது கணவர் கிருஷ்ணராஜூவும் போலி ஆவணம் மூலம் எங்களது சொத்துக்களை அபகரித்து கொண்டனர். அதற்கு தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது பினாமி பழனி முருகன்,குமாரபாளையம் மாணிக்கம்,ஈரோடு வக்கீல் பழனிசாமி ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு என் கணவர் மற்றும் என் கையெழுதையும் போலியாக போட்டுள்ளனர். என் கணவரையும் கொலை செய்து என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.போலீசாரிடம் புகார் அளித்தேன். அவர்கள் விசாரணை செய்து தடயவியல் நிபுணர் அறிக்கை பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,அவரது பினாமி பழனி முருகன்,ஈரோடு வக்கீல் பழனிசாமி,குமாரபாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோருடன் சேர்ந்து செந்தாமரை, அவரது கணவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் டிரஸ்ட் சொத்து, அரசு உதவி பெறும் கல்லூரி, பள்ளி நிலம், கட்டிடம் உள்பட அசையும் சொத்துக்கள், அனைத்தையும் கல்வித்துறை அனுமதியின்றி ஈரோடு இந்தியன் வங்கியில் அடமான வைத்து ரூ.20 கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளனர்.
அதன் மூலம் சாத்தூர் ராமச்சந்திரன் பினாமி பழனிமுருகன் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.செந்தாமரை உள்ளிட்டோர் எங்களை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றாவிட்டனர். எனவே சம்மந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஜே.கே.ஜே.நடராஜாவின் வளர்ப்பு மகளும்,ஜே.கே.ஜே.நடராஜா கல்வி நிறுவனங்களின் சேர்மேனுமான செந்தாமரை,அவரது கணவர் கிருஷ்ணராஜ்,பழனிமுருகன், வக்கீல் பழனிசாமி,தி.மு.க.பிரமுகர் மாணிக்கம் உள்ளிட்ட 6 பேர் மீது சதி செய்தல்,நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல்,மோசடி செய்தல்,ஆள்கடத்தல், போலி ஆவணம் தயார் செய்தல், போலி ஆவணம் தாக்கல் செய்தல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.