முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டியில் 161 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வீரர் ஆடம் புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன்: லண்டன் நாட்வெஸ்ட் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், யார்க்‌ஷயர் வீரர் ஆடம் லித் 161 ரன்கள் விளாசிய புதிய சாதனை படைத்தார்.

லீக் போட்டியில் ...
இங்கிலாந்தில் உள்ளூர் 20 ஓவர்  கிரிக்கெட் தொடாரான நாட்வெஸ்ட் 20 ஓவர்  பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீட்ஸில் நடந்த லீக் போட்டியில் யார்க்‌ஷயர், நார்த்தாண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று யார்க்‌ஷயர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் துவக்கம் முதலே, லித் அதிரடியாக ரன்கள் சேர்க்க துவங்கினார். நார்த்தாண்ட்ஸ் பவுலர்களை பதம் பார்த்த லித் 161 ரன்கள் (20 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்து அவுட்டானார். இவரது அதிரடியால், யார்க்‌ஷயர் அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 260 ரன்கள் குவித்தது.

மூன்றாவது இடம்...
இதன்மூலம் ஒட்டுமொத்த டி-20 அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் பெங்களூரு (263/5, எதிர் -புனே, 2013 ) ஆஸ்திரேலியா (263/3, எதிர்-இலங்கை, 2016), இலங்கையை (260/6 எதிர்-கென்யா, 2007) அணிகளை தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்தது. இப்போட்டியில், 161 ரன்கள் விளாசிய ஆடம் லித், 20 ஒவர்  போட்டிகளில் அதிகரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில், கெயில் (175), ஹாமில்டன் மசகாட்சா (162*) ஆகியோரை தொடர்ந்து ஆடம் லித் (161) மூன்றாவது இடம் பிடித்தார்.  ஆனால், இங்கிலாந்தின் நாட் வெஸ்ட் 20 ஓவர்  பிளாஸ்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் இடத்தில் லித் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

முதலிடம் பிடித்து ...
அதே போல நாட் வெஸ்ட் 20 ஓவர்  பிளாஸ்டில் அதிகரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இதன்பின் இமாலய இலக்கை துரத்திய நார்த்தாண்ட்ஸ் அணி, 14.5 ஓவரில், 136 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 124 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து