எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லம்’ நினைவு இல்லமாக ஆக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து இதற்கான பணிகள் நேற்று தொடங்கின.
வருவாய்த்துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்கு சென்று ஆய்வு நடத்தினர். கடந்த 17ம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லத்தை’ நினைவு இல்லமாக ஆக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. ஜெயலலிதாவின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும் பொதுமக்கள் அறியும் வண்ணம் ஜெயலலிதா சிறப்பாக வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ‘வேதா இல்லம்’ அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு மிக மும்முரமாக பணிகளை தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் போயஸ் கார்டன் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டனர். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டின் அருகிலேயே போலீசார் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அந்த பகுதிக்கு வருபவர்களையும் அந்த பகுதியில்தான் வசிக்கிறார்களா? என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அனுமதி வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவின் வீட்டிற்குள் நுழைய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அங்கு பணியாற்றுபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கும் பணி நேற்று தொடங்கியது. மயிலாப்பூர் தாசில்தார் சைலேந்திரன், அதிகாரிகளுடன் ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்தார். அந்த பகுதி முழுவதையும் அந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வீட்டின் அமைப்பு, அளவுகள் போன்ற பல அம்சங்களை அதிகாரிகள் வெகு நேரம் ஆய்வு செய்தனர். இதுமட்டுமல்லாமல் வீட்டின் பகுதிகளை அளவெடுத்து குறித்துக்கொண்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு முடிந்தபிறகு பொதுப்பணித்துறையினரும் வந்து ஆய்வு நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும்போது அவர் பயன்படுத்திய பொருட்கள், கார்கள், அவருக்கு கிடைத்த பரிசு பொருட்கள், புகைப்படங்கள், அவருடைய பெரிய நூலகம் போன்றவை காட்சிக்காக வைக்கப்படும். மேலும் அவருடைய பேச்சுகள் ஒலிபரப்பவும், அரசியலில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறையில் அவருடைய பங்களிப்புகள், பொதுமக்கள் அறியும் வகையில் காட்டப்படவும், என்னென்ன செய்யலாம் என்று அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: புதிய உச்சத்தில் வெள்ளி விலை
17 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை
-
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி மறுப்பு
17 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
17 Dec 2025சென்னை, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
17 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
சனாதன கும்பலை கண்டித்து டிச. 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு
17 Dec 2025சென்னை, மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
17 Dec 2025ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக தமிழகத்தில் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.11.40 லட்ச
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
குஜராத்: விபத்தில் 3 பேர் பலி
17 Dec 2025காந்தி நகர், குஜராத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு: உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் தலைமை செயலாளர் விளக்கம்
17 Dec 2025மதுரை, எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜரான தலைமை செயலாளர் ஐக
-
பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்திற்கு வழங்கியது ரூ.4,130 கோடி மட்டுமே: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Dec 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி
17 Dec 2025துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
17 Dec 2025சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
-
எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
17 Dec 2025அடிஸ் அபாபா, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிச. 23-ல் தமிழகம் வருகை: நயினார்
17 Dec 2025சென்னை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.


