எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி- காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியின் சார்பில் “எதிர்கால ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு” என்ற தலைப்பிலான ஒருநாள் தேசிய அளவிலான கருத்துப்பட்டறை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில், ஆசிரியர் என்பவர் மதிப்புமிக்கவர், ஆசிரியர்; தான் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி, இயக்குனர்கள், நீதிபதிகள் போன்ற பல்வேறு பதவிகளைவகிக்கக்கூடியவர்களை உருவாக்கு பவர். இந்த சமூகம் ஆசிரியரிடம் இருந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நாம் வேலை தேடிச் செல்லும் போது பிழையில்லாமலும், திருத்தமான உச்சரிப்புடனும், நேர்முகத் தேர்வில் பேசிநம் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அவ்வேலையினை பெறமுடியும் என்றார்.
பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் ஆர்;. சகாயராஜ் வேலைவாய்ப்பின் முக்கியத்துவம் மற்றும் அந்தவேலைவாய்ப்பினை பெற நாம் எதிர்நோக்கும் போட்டித் தேர்வுகளின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். நல்லமனநிலை, உரையாடல் திறன், குழுச்செயல்பாடு, சுயமேலாண்மை, ஆர்வம், சிந்திக்கும் திறன், நேர்மை ஆகிய திறன்களை தனது காணொலிகாட்சியின் மூலம் எதிர்கால ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார். தேசியக் கல்விக் கொள்கையின் புதியசெயல்பாடு, கலைத்திட்டம் ஆகியவை குறித்தும் விளக்கினார்.
அழகப்பாபல்கலைக்கழக தன்னார்வ படிப்பு மைய இயக்குனர் முனைவர் பி. சுரே~;குமார் தமது வாழ்த்துரையில், ஒவ்வொரு சாதனையாளருக்குப் பின்பு அவர்களுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் தான் ஹெலன் கெல்லர், இன்றைக்கு உலகம் முழுவதும் அவர் புகழ் பெற்றதற்கு அடித்தளமிட்டவர் அவரது ஆசிரியர் ஆனி செல்லிவன். ஒரு ஆசிரியர்தான் எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும். நாம் எய்தப்படும் இலக்கு சரியாக இருத்தல் வேண்டும். ஒவ்வொருவரும் வேலையில் சேர்ந்தவுடன் நிர்வாகத்திறனும், பிரச்சினைகளை எதிர்நோக்கும் திறனும் கொண்டிருத்தல் அவசியம். வேலைக்குச் செல்லவேண்டு மென்றால், அதற்கான போட்டித் தேர்வுகளை எழுத முன்வரவேண்டும் என்ற உத்வேகத்தை மாணவர்கள் மனதில் ஆழமாகபதிய வைத்தார்.
கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எ. பாலு அனைவரையும் வரவேற்றார். கலை மற்றும் கைவினை பயிற்சியாளர் இ.எம்.என். சர்மிளா நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


