எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தடப்பள்ளி பாசனப் பகுதியில் இயந்திர நெல் நடவுப் பணி துவங்கியது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பங்கேற்றார்
தற்போது கொடிவேரி அணைக்கட்டு பாசனங்களான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் தடப்பள்ளி பாசனப் பகுதியில் சுமார் 7500 ஏக்கருக்கு நெல் சாகுபடி செய்ய நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதற்கு பாய் நாற்றாங்கால் தயார் செய்யப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் ஒன்று அல்லது இரண்டு நாற்றுக்களை 15-நாட்களுக்குள் நடும்போது தூர்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் கூடுவதால் இந்த முறை விவசாயிகளிடம் பிரபலமாகி வருகிறது.
கோபி வட்டாரத்தில் மேற்படி பாய் நாற்றாங்கால் மூலம் தயார் செய்த நாற்றுகளை இயந்திரம் மூலம் நடவு செய்யும் பணியை செங்கலரைக்கரை பகுதியில் கரட்டடிபாளையம் சுப்பிரமணியம் என்பவரது வயலில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது – ‘ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் வறட்சிக்கு பிறகு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காளிங்கராயன் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திற்கு உணவு தானிய உற்பத்தி இலக்காக 3 இலட்சத்து இரண்டாயிரத்து எட்நூற்று இருபத்து ஏழு மெ.டன்கள் (3,02827 மெ.டன்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இலக்கை எய்துவதற்கு நெல், சிறுதானியம், பயறுவகைகள் ஆகிய பயிர்களை தீவிரமாக சாகுபடி மேற்கொள்ள வேளாண்மைத்துறை களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2000/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், மானாவாரி பகுதி விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 2500 ஏக்கர் கொண்ட தொகுப்பு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை, வேளாண்மை பொறியியல், கால்நடைப் பராமரிப்பு, வேளாண்மை வணிகம் உள்ளிட்ட துறைகள் மூலம் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 20 சிறு, குறு விவசாயிகள் கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்களை ஏற்படுத்தி 50 குழுக்களுக்கு 1000 விவசாயிகள் அடங்கிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பேட்டியின் போது கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி, பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பத்மநாபன் மற்றும் வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியிலிருந்து கிராமத் தங்கல் திட்டத்தின்கீழ் வருகை தந்துள்ள இறுதி ஆண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவியர் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளில் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இயந்திர நடவு பயிற்சி ஏற்பாடுகளை கோபி வட்டார அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் அரவிந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மகாவிஷ்ணு, தமிழ்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


