எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசே காப்பீடு தொகையை செலுத்துவதால் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை இல்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி பெருமிதம் கொண்டார்.
தரிசனம்
புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோவிலுக்கு தரிசனம் மேற்கொள்ள வந்தார். அப்போது கோவில் தர்மகர்த்தா பாலபிரஜாபதி அடிகளார் வரவேற்று பூரண கும்ப மரியாதையான தலைப்பாகை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் சாமித்தோப்பிலுள்ள அன்புவனத்தில் அமைக்கப்படவுள்ள அன்னதான மண்டபத்தில் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், கூடன்குளம் அணுமின் உலை ஆரம்பிக்கும் போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் என்னை அழைத்து கூடன்குளத்தில் அணுமின் உலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டு கெண்டனர். இதையடுத்து நான் கூடன்குளம் வந்து போராட்டக்காரர்களை அழைத்து பேசி கூடன்குளம் அணுமின் நிலையம் அமைய நடவடிக்கைகள் மேற்கொண்டேன். உற்பத்தியாகும் 1600 மெகா வாட் மின்சாரத்தில் ஒரு யூனிட் 90 பைசாவில் கிடைக்கிறது. தற்போது 2வது உலையும் திறக்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இல்லாத நிலை உருவாகும். இன்னும் புதிதாக 4 உலைகள் வர இருக்கின்றன. கூடன்குளம் பகுதியிலுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி நடவடிக்கை மேற்கொண்டேன். திருவனந்தபுரத்திலுள்ள விண்வெளி ஆய்வு மையத்தை போல மகேந்திரகிரியில் இஸ்ரோவின் தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென அவர் கேட்டு கொண்டார். தொடர்ந்து சாமித்தோப்பு அய்யா வைகுண்டப்பதி தர்மகர்த்தாவான பாலபிரஜாபதி அடிகளாருக்கு ‘மடாதிபதி’ என்ற பட்டமும், செங்கோல் ஒன்றும் வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சிக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுவையில் கடந்த 2 வருடங்களாக வறட்சி காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் கூட்டுக்கடனை ரத்து செய்தோம். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பயிர் காப்பீட்டுத் தொகையையும் மாநில அரசே வழங்கியது. ஆகவே தான் புதுவை மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை இல்லை. புதுவை மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் நலத் திட்டப் பணிகள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தாலும், எங்கள் அதிகாரத்தில் பல இடையூறுகள் இருந்த போதும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியும், மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பதும், தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், புதுவை மாநிலத்துக்கு 1850 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதுச்சேரி, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் இடையேயான விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம். டெல்லி நாட்டின் தலைநகராக இருந்தாலும் சட்டம், ஒழுங்கு, நிதி, நிர்வாகம் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதுவையையும், டெல்லியையும் ஒன்றாக இணைத்து இப்போது உள்ள பாஜக அரசு பார்க்கிறது. கெஜ்ரிவாலை போன்று என்னையும் பார்க்கிறார்கள். நான் வேறு என்று அவர்களுக்கு புரியவில்லை. புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே தான் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு இரயில் விடப்பட்டுள்ளது. இதுபோல் பஸ் போக்குவரத்து துவங்கப்படும் என்ற அவர், விஜயதரணி எம்.எல்.ஏ குறித்த கேள்விக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். எங்கள் மாநிலத்தை பொறுத்தவரை அமைச்சரவை எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் புதிய கட்சிகள் ஆரம்பிக்க உள்ளனர். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தொடங்கவும், தேர்தலில் போட்டியிடவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை, என்றார் அவர். புதுச்சேரி முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் ஓபிசி பிரிவு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் மகேஷ் லாசர், வட்டார தலைவர் ராஜஜெகன், விவேகானந்தா கல்லூரி தலைவர் துரைசாமி, செயலாளர் ராஜன், நாடார் மகாஜன சங்கத் தலைவர் கருங்கல் ஜார்ஜ், சாமித்தோப்பு பதியை சார்ந்த தர்மகர்த்தாக்கள் வக்கீல் பால ஜனாதிபதி, லோகாதிபதி, பையன்ராஜா, லோக் பாலபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Dec 2025- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
- திருவிண்ணாழி பிரதட்சணம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Dec 2025 -
இன்றைய ராசிபலன்
30 Dec 2025



