எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் போக பாசனத்திற்காக முல்லைபெரியார் அணையிலிருந்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தண்ணீரை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு வேளாண்குடி பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரியாறு அணையிலிருந்து நேற்று முதல் விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வீதம் 120 நாட்களுக்கு, முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரால் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர் சாகுபடி நிலம், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கர் சாகுபடி நிலம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்தில் 488 ஏக்கர் சாகுபடி நிலம் உட்பட பதிவு பெற்ற இருபோக சாகுபடி நிலங்களில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கனஅடி வீதமும் என மொத்தம் விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது பெரியாறு அணையின் நீர் இருப்பு 127.2 அடியாக உள்ளது. நீர் வரத்து 1467 மி.க வந்து கொண்டிருக்கிறது. மேலும், முதல் போக நெல் சாகுபடிக்குத் தேவையான நெல் இரக விதைகளான என்.எல்.ஆர்-34449 134 மெ.டன்னும், டி.கே.எம்.-13 43 மெ.டன்னும், கோ-51 7 டன்னும் மாவட்டத்தில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது
நெல் விதைகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானியமாக கிலோவிற்கு ரூ.20-ம் விதைக் கிராமத்திட்டத்தில் ஒரு கிலோவிற்கு 50 சதவீத மான்யமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விதையினை விதை நேர்த்தி செய்யத் தேவையான அம்மா உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்திட போதுமான அளவு இருப்பு வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ளது. நெல்லில் இயந்திர நடவு மேற்கொள்ள ஹெக்டேர் ஒன்று ரூ5000 வீதம் 600 ஹெக்டருக்கு ரூ.30.00 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாவட்டத்திற்கு தேவையான இரசாயன உரங்களான யூரியா 1543 மெ.டன்னும், டி.ஏ.பி 1498 மெ.டன்னும், பொட்டாஸ் 983 மெ.டன்னும், கலப்பு உரங்கள் 1942 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு பயிர்களை நடவு செய்து பயனடையுமாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக வேளாண்மை அலுவலகத்தில் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த விதைகளை விவசாயிகள் பெற்று பயனடையுமாறும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திடவும், பேபி அணை பலப்படுத்தப்பட்டவுடன் முல்லை பெரியார் அணையில் 152 அடி வரை நீரை தேக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் டி.டி.சிவக்குமார், நகர செயலாளர்கள் தேனி முருகேசன், பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ், ஒன்றிய செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், தேவராம் சீனிவாசன் முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ், பி.சி.பட்டி பொறுப்பாளர் தீபன்சக்கரவர்த்தி, செயற்பொறியாளர் (பெரியாறு வைகை வடிநில கோட்டம்) சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
திருப்பரங்குன்றம் வழக்கு: ராம ரவிக்குமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
08 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
-
பொங்கல் பரிசு தொகை டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்யலாம்..?
08 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-01-2026
08 Jan 2026 -
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்
08 Jan 2026சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் இன்று நடைபெறுகிறது தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
08 Jan 2026கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
08 Jan 2026சென்னை, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ரகுபதி, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவ
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Jan 2026புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
08 Jan 2026வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப் தகவல்
08 Jan 2026வாஷிங்டன், நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு: ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
08 Jan 2026சென்னை, சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைய
-
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jan 2026மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூரில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
08 Jan 2026சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
ஞாயிற்றுக்கிழமையான வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி. குழு பரிந்துரை
08 Jan 2026புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா திடீர் தடை
08 Jan 2026பீஜிங், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட
-
மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை
08 Jan 2026டாக்கா, மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.
-
மேலும் வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: திருவாரூர், நாகப்பட்டினத்தில் இன்று மிக கனமழை பெய்யும்
08 Jan 2026சென்னை, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியா? ரிலையன்ஸ் விளக்கம்
08 Jan 2026புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
08 Jan 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை : ராமதாஸ் பேட்டி
08 Jan 2026விழுப்புரம், பா.ம.க.
-
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்
08 Jan 2026புதுடெல்லி, முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு
-
ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
08 Jan 2026திருச்சி, ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு நிறைவு
08 Jan 2026மதுரை, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.


