முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாட்ஸ் அப்பிலும்...

முன்பு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நொவ்கட் மாடலில் மட்டும் செயல்படக்கூடிய யுனிகோடு 9 எனும் மென்பொருளானது தற்போது ஆண்ட்ராய்டின் அனைத்து வெர்ஷனிலும் அப்டேட் ஆகியுள்ளது. அதனால் பீட்டா எமொஜிகளான பட்டாம்பூச்சி, தரையில் சிரித்து உருளும் முகம், கோமாளி முகம், வானவில்  என பல புதிய எமொஜிகள் வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் உடலில் எலும்புகளின் எண்ணிக்கை அதிகம்

மனித உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206 என்பது பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தெரியாத ஒரு விசயம் என்னவென்றால் குழந்தை பிறந்தவுடன் அதன் உடலில் எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். வளர்ந்த மனிதனின் உடலில் காணப்படுவதைப் போல அல்லாமல் குழந்தையின் உடலில் 300 எலும்புகள் காணப்படும். மனிதன் வளர வளர அவற்றில் ஒரு சில எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுதியில் 206 என்ற எண்ணிக்கைக்கு வந்து விடுகின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்..

பறக்கும் கார்கள்

புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல, ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

குழந்தைகளை கண்டறிய

கடந்த ஜனவரி 2012 மற்றும் மார்ச் 2017 இடையே 2.5 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. காணாமல் போன குழந்தைகளை கண்டறிய சென்னையை இரு இளைஞர்கள் மொபைல் ஆப் ஒன்றை கண்டறிந்துள்ளார். முகங்களை அடையாளம் காணும் மென்பொருள் உதவியுடன் 'ஃபேஸ்டேக்ர்' எனும் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். இதில்  காணாமல் போன குழந்தையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், அந்த குழந்தையின் புகைப்படத்துடன் ஒத்துப்போகும் குழந்தைகளின் புகைப்படங்கள் தோன்றும். அதன் மூலம் அந்த குழந்தை இருக்கும் இடத்தை அறிய முடியுமாம். இதுதான் இதன் சிறபம்சம். இந்த ஆப் மூலம் இதுவரை 100க்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

செல்ஃபி எடுக்க

செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள அல்காரிதம், செல்ஃபி எடுக்கும் போது கேமிராவை எங்கு வைப்பது, எந்த திசையில் சரியான ஒளி கிடைக்கிறது, முகத்தின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. அதன்மூலம் சிறந்த செல்ஃபிக்களை எடுக்க பயனாளர்களுக்கு உதவுமாம்.

புதிய அப்டேட்

சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகளுக்கு நமது உணர்வுகளை தெரிவிக்கும் விதத்தில் ரியாக்‌ஷன் பட்டன்கள் உள்ளன.  பேஸ்புக்கில் கடந்த ஆண்டில் மட்டும் 300 பில்லியன் தடவை இதை பயன்படுத்தியுள்ளனர். லைக் பட்டன்கள் மட்டுமே இதுவரை இருந்த நிலையில், பேஸ்புக் மெசஞ்சர் ஆப்பில் டிஸ்லைக் பட்டன் விரைவில் வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago