முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சற்று அதிகம்தான்

சர்வதேச அளவில் சுமார் 550 கோடி மக்கள் உடல் குண்டானவர்கள் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது உலக மக்கள் தொகையில் 76 சதவீதம் ஆகும். குண்டாவதற்கு உடலில் ஏற்படும் அதிக அளவு கொழுப்பே காரணம்.இதனால் உடல் நலத்திற்குதான் கேடு. போதுமான அளவு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடாததே காரணம். உடல் பருமன் பூமியில் தோன்றியுள்ள புது விதமான தொற்றுநோய் என ஆராய்ச்சியாளர்கள் வர்ணித்துள்ளனர்.குண்டாவதால் அடி வயிற்று பகுதியில் அதிக அளவு கொழுப்பு உருவாவதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.

குடிநீருக்காக ....

அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளன. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வந்து, பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

செயற்கை சூரியன்

149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி, உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை ஜெர்மனி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருமாம். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8x8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை பொருத்தி செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இது 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் எனவும் கூறப்படுகிறது. சோதனை முயற்சியில் இருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகவும், ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கும் மருத்துவமனை

அல்ஜீரியாவில், ஃபேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்குள் மக்களை இழுக்க  தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருவதாகக் எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் உலகம்

உலக அளவில் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் 10 மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவற்றையே இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுகின்றனராம்.

32 மொழிகளை சரளமாக பேசுபவர்

நமக்கெல்லாம் ஒன்று இரண்டு மொழிகளையே ஒழுங்காக பேசுவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது. ஆனால் ஒருவர் 32 மொழிகளில் சரளமாக பேசி தள்ளுகிறார். அவர் யார் தெரியுமா.. ஐரோப்பா பாராளுமன்றத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளரான கிரேக்கத்தைச் சேர்ந்த Ioannis Ikonomou ஆவார். தொடக்கத்தில் புரூசெல்ஸ் நகரில் மொழிபெயர்ப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் தற்போது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெங்காளி, ஸ்வாஹிலி, துருக்கி என 32 மொழிகளில் வெளுத்து கட்டுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago