முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

போக்குவரத்து விளக்குகள் எப்போது வந்தன?

ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868ஆம் ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் மோட்டார் வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.பச்சை, சிகப்பு ஆகிய இரு வண்ணங்கள் மட்டுமே அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன. உருளையில் நிரப்பப்பட்ட வாயுவினால்தான் அவ்விளக்குகள் எரிந்து வந்தன; இவ்வமைப்பு அப்போது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், காவல் துறையைச்சார்ந்த வில்லியம் பாட்ஸ் என்பவர் இரயில்வே சமிக்கைகளின் அடிப்படையில் போக்குவரத்து விளக்குகளை அமைக்க முயற்சி செய்தார். பச்சை, சிகப்பு, காவி பூசிய மஞ்சள் ஆகிய நிறங்களுடன் கூடிய விளக்குகளை நிறுவி இவர் தமது முயற்சியில் 1920ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1923ஆம் ஆண்டு போக்குவரத்து விளக்குகள் நிறுவப்பட்டன. முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு 1927ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.

உலகிலேயே வெள்ளி காசை விட மிகச்சிறிய உருவம் கொண்ட வவ்வால்

உலகிலேயே மிக சிறிய வவ்வால் இனங்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண வெள்ளி காசுகளை காட்டிலும் உருவத்தில் சிறியவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிட்டிஸ் ஹாக் நோஸ் வவ்வால் அல்லது பம்பிள்பீ வவ்வால் என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் எடை 2 கிராமுக்கும் சற்று குறைவுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அழிந்து வரும் அரிய வகை இனமான இந்த வவ்வால்கள் பொதுவாக தாய்லாந்து, மியான்மர் நாடுகளில் காணப்படுகின்றன. ஆற்றங்கரையோாரம் உள்ள பாறைகளின் குகைகளே இவைகளின் வசிப்பிடங்களாகும். இவை கூட்டம் கூட்டமாக வசிக்கக் கூடியவை. ஒரு கூட்டத்தில் சுமார் 100 வவ்வால்கள் வரை காணப்படும்.

சாதனை பாகுபலி-2

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடி படமாக வெளியாகியுள்ள 'பாகுபலி-2' திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. இந்த படம் 3 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படத்தை தவிர, தற்போது அறிமுகமாகியுள்ள பாகுபலி சேலைகள் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளதாம்.

430 கோடி ஆண்டுகள் பழசு

430 கோடி ஆண்டுகள் பழமையான பாக்டீரியா படிமங்கள் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு கியூபெக் பகுதியில் அமைந்துள்ள ஹட்சன் கடற்கரையோரம் இந்த படிமங்கள் கிடைத்துள்ளன. பூமி தோன்றிய சிறிது காலத்திலேயே இந்த பாக்டீரியாக்கள் உருவாகியிருக்கலாம் என இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

யானை ஆச்சரியம்

பன்றி இனத்தைச் சேர்ந்தது யானைகள். ஆப்ரிக்க யானைகள், சராசரியாக 3 ஆயிரத்து 500 கிலோ எடை உடையது. ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணீரும் உட்கொள்ளும். யானைகளின் தந்தங்கள் ஐந்து மீட்டர் நீளமும், 90 கிலோ எடையும் கொண்டு இருக்கும். மணிக்கு 32 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடைய யானை, நீரில் நன்றாக நீந்தவும், 4.5 மீட்டர் ஆழத்தில் மூழ்கியும் செல்லும். யானைகளுக்கு வாசனை நரம்புகள் வாயில் இருப்பதால், சுவாசிப்பதும், வாசனை அறிவதும் தும்பிக்கையால்தான்.’’முதன்முதலில் தோன்றிய யானை, பன்றி அளவே இருந்தது. இதனால், யானைகள் பன்றி இனத்தைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து பின்பு துதிக்கையாக வளர்ந்தது’’ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புதிய முயற்சி

பிரேசில் நாட்டின் ஹோர்டோலண்டியா பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைப்பெற்றது. அப்போது, 245 பேர் இணைந்து ஒரே நேரத்தில் பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்தனர். 245 பேரும் பாலத்தில் ஊஞ்சல் ஆடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago