முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பழமையான தொழில் பல் மருத்துவம்

உலகின் பழமையான தொழில்களில் பல் மருத்துவமும் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது. ஒரு ஆய்வின் போது கிடைத்த மண்டையோட்டில் சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லில் துளையிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல இத்தாலியில் உள்ள போலோக்னா பல்கலை கழகம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில் சுமார் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது வரலாற்று காலத்துக்கு முன்பே ஒரு சொத்தை பல்லை கருவிகளால் அகற்றிய தடயம் கண்டறியப்பட்டுள்ளது.

கொம்பு வைத்த கிரீடங்கள் எப்போது தோன்றின தெரியுமா?

ராஜாக்கள், மந்திரிகள், தளபதிகள் போன்றோர் அணியும் கிரீடம் அல்லது தலை கவசங்களை நாம் திரைப்படங்களிலும், அருங்காட்சியகங்களிலும் நாம் பார்த்திருப்போம். வடமேற்கு ஐரோப்பாவில் 8 முதல் 11 நூற்றாண்டு வரையிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி குடியேறிய வைக்கிங் எனப்படும் ஒருவகை கூட்டத்தினரின் கால கட்டத்தில் உருவானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய ஆய்வுகள் இதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. ஐரோப்பாவில் காணப்பட்ட ெகாம்பு வைத்த கிரீடங்கள் அல்லது தலை கவசங்கள் அதற்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையவையாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பித்தளை கால கட்டம் என வர்ணிக்கப்படும் கிமு 3300 கால கட்டமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. 1942 இல் கோபன்ஹேகனில் இது தொடர்பான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல்நலம் காக்க

காலை, வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்கள், காரமான உணவுகள், வாழைப்பழம், பச்சை காய்கறிகள், தக்காளி, பேரிக்காய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு அல்சரையும், கார உணவுகள் மற்றும் பச்சை காய்கறிகள் நெஞ்செரிச்சலையும், வாழைப்பழம் இதய பிரச்சினையையும் ஏற்படுத்துமாம்.

புதிய கிரகம்

அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு இதுவரையில்லாத அளவு மிக சூடான பெரிய வாயுக்கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. கெல்ட் 9 பி என்று கிரகத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இந்த கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை 4,300 டிகிரி செல்சியஸ் ஆகும். இது வியாழன் கிரகத்தை விட 2.8 மடங்கு பெரியதாகும்.

3500 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மியை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்த விஞ்ஞானிகள்

உலக அதிசயங்களில் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மிகளும் மக்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருபவை.  மம்மிக்களை ஆய்வு செய்யும்போது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக 3500 ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு கண்டடைந்தனர் என்பது விளங்காத மர்மமாகவே உள்ளது. இதனால் மம்மிக்களை ஆய்வு செய்யும் போது அவற்றை திறப்பதால் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தற்போது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மம்மிக்களை திறக்காமலேயே அவற்றை டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் ஆய்வு செய்யும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து  பிரமிடிலிருந்து கடந்த 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட அமேன்ஹோடெப் என்ற மன்னரின் மம்மியை டிஜிட்டல்  முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல்வேறு அதிசய தகவல்கள் வெளியாகின. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 35.  சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த மன்னரின் பற்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளன.  உடலை சுற்றியிருந்த துணிக்குள் மன்னருக்கு தங்கத்தாலான ஆடையும் அணிவிக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இல்லாததால் அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. இவர் கிமு 1525 முதல் 1504 வரை 21 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இதனால் இவர் மிகவும் இள வயதிலேயே முடி சூடி இருக்கலாம். இன்றைக்கு மருத்துவம் தொழில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள போதிலும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு தெரிந்து வைத்துள்ளனர் என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

நவபாஷாண சிலைகள்

தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை 18 சித்தர்களுள் ஒருவராகிய போகர். போகர் கற்று வைத்திருந்த ஆயகலைகள் 64ஐயும் அவர் வேறு எவருக்காவது கற்று தந்தாரா என்றால் இல்லை என்றே தெரிகிறது. அதுகுறித்து அவர் ஓலைச் சுவடிகளில் எழுதியுள்ளதாகவும். அதை படித்து சாகாவரம் தரும் மூலிகைகளைக் கூட கண்டுபிடிக்கலாம் என்று பல முனிவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி சக்தி வாய்ந்த போகர், 64 கலைகளையும் கற்றுகொண்டு, பல்வேறு வகையான மருந்துகளையும், சகாவாரம் தரும் மூலிகைகளையும் கண்டறிந்துள்ளார். அவருக்கு கூடுவிட்டு கூடு பாயும் கலை தெரிந்திருந்ததாகவும் பல்வேறு முனிவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!