முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நாய்களின் திறமை

நாயின் மூளையில் உள்ள மோப்ப சக்தி, மனிதனின் மோப்ப சக்தியை விட 40 மடங்கு அதிகம். எனவே நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் மனித நோயை கண்டறிவதற்கான முழுத் திறனும் நாய்களுக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்களுக்கு உதவும் வகையில், பார்கின்ஸன்ஸ் நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாய்களின் மூக்கில் உள்ள துவாரத்தில் இருந்து வெளிப்படும் மெல்லிய ஆற்றலைப் பயன்படுத்தி நாய்களால் நோய்களைக் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இதனால் நோய் கண்டறிவதற்கு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கும் கடந்த காலத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சாதனை பெண்

வரும் 2018- ம் ஆண்டில் நடைபெற உள்ள விண்வெளி பயணத் திட்டத்தின் கீழு் பங்கேற்கவுள்ள நபர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ஷாவ்னா பாண்டியா உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதன் மூலம் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சை தொடர்ந்து, விண்வெளி செல்லும் 3-வது இந்திய வம்சாவழி பெண் இவர்.

உலகில் அமைதியான இடம் எது தெரியுமா?

உலகிலேயே மிகவும் அமைதியான இடம் எங்குள்ளது என்ற தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இயற்கையான இடமோ, நகரோ அல்ல. மாறாக அது ஒர் அலுவலகம். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரெட்மாண்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மைக்ரோஷாப்ட் தலைமையகத்தில் உள்ள பரிசோதனை கூடம்தான் அந்த இடம். இந்த இடத்தில் உள்ள சத்தத்தின் அளவு வெறும் 20 டெசிபலுக்கும் கீழே உள்ள இடம். இதன் மூலம் முந்தைய சாதனைகளை இந்த இடம் முறியடித்துள்ளது

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

புதிய தொழில்நுட்பம்

ஜெர்மனியை சேர்ந்த கார் தயாரிக்கும் நிறுவனமான வோக்ஸ்வாகன் ஸ்டேரிங் மற்றும் சாவி இல்லாமல் முழுவதுமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக வீடியோ கேம் விளையாடும் போது காரை எப்படி ஓட்டுவோமோ அப்படியே இனி நிஜ வாழ்க்கையிலும் ஓட்ட முடியுமாம். சந்தையில் விரைவில் வரும் இந்த காரின் விலை சற்று அதிகம்

ஒற்றை கண்ணை திறந்து வைத்து உறங்கும் உயிரினம் எது தெரியுமா?

கடல் வாழ் உயிரினங்களிலேயே மனிதர்களுடன் மிகவும் நட்பாகவும், உறங்கும் போது ஒரு கண்ணை மூடி, ஒரு கண்ணை திறந்து வைத்து கொண்டிருக்கும் அந்த விலங்கினம்... நிச்சயமாக அது டால்பின்கள்தான் என்பது சொல்லாமலேயே தெரிந்திருக்கும்...எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளவும், மூளையின் ஆற்றலை பாதுகாக்கவும் டால்பின்கள் இவ்வாறு ஒரு கண்ணை திறந்து வைத்துக் கொண்டு உறங்குவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதன் மூலம் அரைத் தூக்கம், அரை விழிப்பு என்ற நிலையில் எப்போது டால்பின்கள் உஷராக இருக்கின்றன... என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்