முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காரில் செல்லும் போது தும்மினால் 50 அடி தொலைவுக்கு கண்கள் மூடி கொள்ளும்

பொதுவாக நாம் தும்மும்போது கண்களை மூடிக் கொள்வது வழக்கம். கண்களை திறந்து கொண்டு ஒரு போதும் தும்ம இயலாது என்பது உங்களுக்கு தெரியுமா... அப்படி ஏதும் விபரீதத்தில் ஈடுபடாதீர்கள்... கண்களை திறந்து வைத்து தும்மினால் விழி வெளியே பிதுங்கி விடும். அதே நேரத்தில் மணிக்கு 60 மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் பயணிக்கும் போது நீங்கள் தும்மினால் அப்போதும் கண்களை மூடிக் கொள்வீர்கள். ஆனால் எவ்வளவு தொலைவுக்கு தெரியுமா... 50 அடி தொலைவுக்கு. கடந்த 2014 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வாகனஓட்டிகள் தும்மும்போது அவர்களுக்கு தற்காலிகமாக பார்வை இழப்பு ஏற்படுகிறது. இதனால் இங்கிலாந்தில் மட்டும் வாரத்துக்கு 2500க்கும் அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

2000 ஆண்டுகள் பழமையான கல்லறையில் எழுதப்பட்டிருந்தது பூஜ்யமா?

கர்நாடக மாநிலம் தஷிண கன்னட மாவட்டத்தில் உள்ள கடப்பா தாலுகாவில் ராமகுஞ்சா கிராமத்தில் பாண்டவர் குகை எனப்படும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கல்லால் ஆன கல்லறை ஒன்று இருப்பதாக உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எம்எஸ்ஆர்எஸ் கல்லூரியின் தொல்லியல் துறை தலைவர் பேரா. முருகேஷி மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன கல்லறையை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி அதன் மேற்புறத்தில் உள்ள கல்லில் வட்ட வடிவில் அல்லது பூஜ்ய வடிவில் எழுதப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து முருகேஷி கூறுகையில், அதன் மேற்புறத்தில் காணப்படுவது வட்டமா அல்லது அப்போதே இங்கு வாழ்ந்த மக்கள் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிந்துள்ளனரா என்பது வியப்பாக உள்ளது. இது குறித்து மேலும் ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றார். கற்கால தொல்லியல் எச்சத்தின் மீது எழுதப்பட்டுள்ளது பூஜ்யமா என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி பொது மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல் அதிபர்

நாற்பது வருடத்தில் அமெரிக்காவிற்கு ஒரு கருப்பு அதிபர் கிடைப்பார் என ராபர்ட். எப். கென்னடி கூறியது போல, ஒபாமா அதிபரானார். இவர், ஹாரி பாட்டர்-ன் அனைத்து புத்தகங்களையும் முழுவதுமாக படித்தவர்.  2016- வரையிலும் அதிக ட்விட்டர் பின்தொடர்பவர்களை கொண்டிருந்த உலக தலைவர்களுள் முதல் இடத்தை பெற்றிருந்தவர் இவர் தான்.

உலகின் 'மாதிரி'

சுமார் 49 ஆயிரம் சதுர அடியில் உலகின் மிகப் பெரிய மினியேச்சர் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மினியேச்சரில் ஆசியா உள்ளிட்ட 5 கண்டங்களின் முக்கிய கட்டடங்கள், சுற்றுலாத் தளங்கள் இடம்பெற்றுள்ளன. குலிவேர்ஸ் கேட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மினியேச்சரில் லண்டனின் பக்கிங்காம் அரண்மனை, பிரான்சின் ஈஃபில் டவர், இந்தியாவின் தாஜ் மஹால், சிங்கப்பூரின் மெரினா பே உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், சுற்றுலாத் தலங்களின் மாதிரிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 600 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதை உருவாக்கியுள்ளனர். மினியேச்சரை உருவாக்க சுமார் 260 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வரவுள்ளது.

நடன ஆசிரியை

சீனா, சோங்சிங் மாநிலத்தில் நடன குழு ஒன்றிற்கு 5 வயது சிறுமி ஒருவர் ஆசிரியையாக உள்ளார். டைலான் ஜிங்யீ என்ற சிறுமி, கடந்த நவம்பரிலிருந்து இந்த நடன குழுவை வழி நடத்தி வருகிறார். டைலான் தனது நடன பயிற்சியை 2 மாதத்தில் முடித்து விட்டு தற்போது நடனஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அதிநவீன விமானம்

தற்போது ஒரு அடுக்கும் விமானம் மட்டுமே உள்ள நிலையில், மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். இதில் 250 பேர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியும். இந்த விமானத்தில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணிநேரத்துக்கு முன்னதாக செல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்