முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வெள்ளை காண்டா மிருகத்துக்கு ஆயுத பாதுகாப்பு

உலகின் கடைசி வெள்ளை ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகங்களில் ஒன்றுக்கு, இனப்பெருக்க திட்டத்திலிருந்து விஞ்ஞானிகள் ஓய்வு கொடுத்துள்ளனர். இந்த இனம் அழிந்துவிடாமல் இருக்க, இந்த இனப்பெருக்கத் திட்டம் நடத்தப்பட்டது. வெள்ளை காண்டாமிருக இனத்தின் கடைசி ஆண் விலங்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இறந்து போனது.ஆனால் அதன் விந்தணு சேகரிக்கப்பட்டு, இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இறந்த இரு ஆண் காண்டாமிருகத்திலிருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள விந்தணு மற்றும் பெண் காண்டாமிருகத்தின் கருமுட்டையைப் பயன்படுத்தி செயற்கை முறையில் கருதரிக்கச் செய்கிறார்கள். வெள்ளை காண்டாமிருகங்கள் வேட்டை மற்றும் வாழ்விட இழப்பின் காரணமாக அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன.நாஜின் என்று பெயரிடப்பட்டுள்ள வெள்ளை பெண் காண்டாமிருகம் செக் நாட்டில் ஒரு வன விலங்கு பூங்காவில் பிறந்தது. பத்தாண்டு காலத்துக்குப் பிறகு கென்யாவில் உள்ள ஒல் பெஜெடா வன விலங்கு பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கு அதற்கு பலத்த ஆயுத பாதுகாப்புக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடும் நேரம்

பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள அணு கடிகாரத்தில், ஒரு வினாடி தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

விநோத வழக்கம்

உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யமான ரோம் சாம்ராஜ்யத்தில் பல விநோதமான பழக்கவழக்கங்கள் இருந்தன. துணிகளை துவைக்க, பண்டைய ரோம் நாகரீகத்தில் சிறுநீரை பயன்படுத்தினர். மேலும், பற்களை வெள்ளை ஆக்கவும் ரோமானியர்கள் இதை பயன்படுத்தினர். அழகை மேம்படுத்த பெண்கள், கிளாடியேட்டர்களின் வியர்வையை பயன்படுத்தினர்.

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

ஷாப்பிங் மால் முதன்முதலில் எங்கு கட்டப்பட்டது

இன்றைக்கு நவீன நாகரிக உலகில் பேஷன் மால்களை கடக்காமல் நம்மால் ஒரு நாளை கூட தாண்ட முடியாது... முதன் முதலில் ஷாப்பிங் சென்டர்கள் எங்கு கட்டப்பட்டன தெரியுமா...ரோமில்தான். அங்குள்ள குயிரினல் ஹில் பகுதியில் தான் டாமஸ்கஸ் கட்டிட கலைஞர் அப்போலோ டோரஸ் என்பவரால் முதன் முதலில் இரண்டாம் நூற்றாண்டில் 5 அடுக்கு ஷாப்பிங் மால் கட்டப்பட்டது. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பெரிய சந்தை வணிக வளாகம் இதுவாகும். தற்போது இந்த கட்டிடம் ஒரு அருங்காட்சியகமாக பராமரிக்கப்படுகிறது.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்