முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தொடர்ந்து 20 ஆண்டுகளாக 19 உலக சாதனைகளை நிகழ்த்தி வரும் மூதாட்டி

ஜப்பானை சேர்ந்தவர் 72 வயதான மூதாட்டி Chiyomi Sawa. இவர் 19 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்றால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆகவேண்டும். அதிலும் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து 19 உலக சாதனைகளை நிகழ்த்தி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி தன் வசம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். பளு தூக்குதலில் தான் தொடர்ந்து அவர் இந்த சாதனைகளை நிகழ்த்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுடுநீரின் பயன்

சுடுநீர் குளியல் உடலை ரிலாக்ஸ் செய்யும், மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும். மேலும், சுடுநீர் குளியல், செரிமானத்திற்கு உதவும், சரும நிறத்தை அதிகரிக்குமாம். உணவு உண்ணும் போது சுடு நீரைப் பருகினால், செரிமான பிரச்சினைகள் ஏற்படாதாம்.

கவனம் தேவை

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்குமாம்.  சர்வதேச விஞ்ஞானிகள், 4 லட்சத்து 46 ஆயிரத்து 763 பேரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்ததில், ஸ்டீராய்டு இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதால் மாரடைப்புக்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்தில்கூட அதிக ஆபத்துகள் வரக்கூடும் என்றும், அதிக ‘டோஸ்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தெரியாம போச்சே

1998-ம் ஆண்டு முதல் ஆப்பிள் கருவிகளில் ‘ஐ’ முன்வைக்கப்பட்டுள்ளது.‘ஐ’ -ன் அர்த்தம் என்ன என்றால் பெரும்பாலானோருக்கு தெரியாது. அதன் அர்த்தம் இண்டர்நெட் என ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார். இதற்கு தனிப்பட்ட (individual), அறிவுறுத்து (instruct), தெரிவித்தல் (Inform) மற்றும் ஊக்குவித்தல் (inspire) போன்றவையும் அர்த்தமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கதிர்வீச்சு அபாயம்

செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா. ஆய்வுகள் தொடர்ந்துவரும் நிலையில் தற்போது அதிர்ச்சி தகவலாக, முன்னர் எண்ணியதை விடவும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும்போது புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் இரு மடங்கு காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மாதிரி அமைப்பு ஒன்றினை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக அண்டவெளியிலுள்ள கதிர் வீச்சுக்கள் நேரடியாக செவ்வாய் கிரகத்தினை சென்றடைவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொசுக்கு எதிரி கொசு

கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரசுக்கு எதிரான போரட்டத்தில் கொசுக்களையே களமிறக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகை அச்சுறுத்திவரும் ஜிகா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.இந்தநிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் மூலம் ஜிகா, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க முடியும் என்று அமெரிக்க மறுத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அவற்றை வெளிவிடுவதன் மூலம், ஜிகா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்