முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் முதல் ஸ்டெனாகிராஃபர்

சர் ஐசக் பிட்மன் என்னும் ஆங்கில எழுத்தாளர் 1837ஆம் ஆண்டில் தற்போது பழக்கத்தில் உள்ள ஸ்டெனோகிராபி எனப்படும் புதிய வகைச் சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் கோடுகள் போடப்பட்ட தாள்களில் மட்டுமே எழுதப்பட்டன.ஜான் ராபர்ட் கிரெக் என்பவர் 1888ஆம் ஆண்டு இந்த முறையை மேம்படுத்தினார். முதலில் இச்சுருக்கெழுத்து முறை ஆங்கில மொழிக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது; காலப் போக்கில் இம்முறை பிற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற கிரேக்க தத்துவ அறிஞர்களின் "Tenets and Lectures" என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன் முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய சுருக்கெழுத்து முறை 19ஆம் நூற்றாண்டில்தான்  வளர்ச்சியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கண்ணாடிகள்

சீனாவில் கண் அசைவுகளை எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றும் ட்ரைபோஎலெக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் என்ற தொழில்நுட்பத்தை கொண்டு கண் தசைகளின் அசைவுகளை கட்டளைகளாக மாற்றும் புதிய கண்ணாடிகளை வடிவமைத்துள்ளனர். கண் கண்ணாடிகளின் பிரேமில் இந்த சென்சார்கள் இணைக்கப்பட்டு, கண் தசைகளின் அசைவுகளை முழுமையாகக் கண்காணிக்கும். அசைவுகளைக் கட்டளைகளாக மாற்றி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட சிறிய அளவிலான எலெக்ட்ரானிக் கருவிக்கு கடத்தும். இதன்மூலம் கண் அசைவின் கட்டளைகளை ஏற்று கம்ப்யூட்டர்கள் ஆன் செய்வதோ, ஆஃப் செய்வதையோ நிகழ்த்தலாம். இதன் மூலம் கீ போர்டு இல்லாமலேயே கண் அசைவினாலேயே டைப் செய்ய முடியுமாம்.

மகளிர் நினைவாக

உலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, நியூயார்க் நகரில் ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது

தேநீர்தான் உணவு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் உண்ண உணவு கிடைக்காமல், வெறும் க‌றுப்புத் தேநீரை (பிளாக் டி)மட்டுமே பருகி உயிர்வாழ வேண்டிய நிலை அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.  பால் வழங்கிக் கொண்டிருந்த ஆடுகளும், மாடுகளும் வறட்சியால் இறந்துபோய் விட்டதால் இந்த நிலைமைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தெரிந்தும் தெரியாதது

சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்து, மிகப்பெரிய மௌரிய பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர் தான் சாணக்கியர். இவர் படிப்பை பழம்பெரும் தக்ஷஷீலா பல்கலைகழகத்தில் முடித்தார். உலகிலேயே மிகச்சிறந்த பாடசாலையாக இருந்த இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.

அழகு பொருள்

தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும். புளியுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை செய்தால், முகம் பளிச்சென்று இருக்கும். மேலும்,இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு பளிச் தோற்றம் தருவதிலும் இதன் பங்கு அதிகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago