முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கோமோடோ டிராகன் எனப்படும் பல்லிகள்

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னெஸ்ஸி என்ற இடத்தில் உள்ள மிருககாட்சி சாலையில் கோமோடோ டிராகன் எனப்படும் ராட்சத பல்லி இன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால் பெண் பல்லிகள் ஆண் துணை இல்லாமலேயே தானே கருவுற்று குட்டிகளை ஈனுகின்றன. ஆனால் மிகவும் அரிதாகவே இவை நடந்ததாக சொல்லப்படுகிறது. 

100 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பேர் வசிக்கும் அதிசய சிற்றூர்

இத்தாலியில் உள்ள சுமார் 1765 பேர் வசிக்கும் சிற்றூர் ஒன்றில் 10 க்கும் மேற்பட்டோர் தங்களது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளனர். இத்தாலியில் உள்ள சர்தினியா என்ற தீவில் அமைந்துள்ள பெர்தாஸ்தேபோகு (Perdasdefogu) என்ற சிற்றூர்தான் அந்த பெருமைக்குரிய இடமாகும்.உலகில் 100 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் பேர் வசிக்கும் 5 இடங்களில் சர்தினியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு 1 லட்சம் குடியிருப்பு வாசிகளில் சுமார் 33.6 சதவீதம் பேர் 100 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த ஊர் கின்னஸில் இடம் பெற்றது. மெலிஸ் என்பவரின் குடும்பம் கடந்த 9 தலைமுறையாக இதே ஊரில் வசித்து வருகின்றனர் என்ற சாதனையுடன் அது கின்னஸ் சாதனை படைக்கப் பெற்றது.  கன்சோலடா மெலிஸ் என்பவரின் வம்சாவளியினர்தான் இந்த ஊரின் மிகவும் மூத்த குடும்ப வம்சாவளியினர் ஆவர். அவர் தனது 105 ஆவது வயதில் கடந்த 2015 இல் காலமானார். இந்த ஊரை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சுத்தமான காற்று, மாசில்லாத சுற்றுச்சூழல், ஆரோக்கியமான உணவு உள்ளிட்டவைதான் இங்கு வாழ்பவர்கள் அதிக ஆண்டுகள் உயிருடன் இருப்பதற்கு காரணம் என்பதை கண்டறிந்தனர். தற்போது 10க்கும் மேற்போட்டோர் இவ்வூரில் சென்சுரி அடித்துள்ளனர். கேட்கவே பொறாமையாக இருக்கு அல்லவா..

கூகுள் போட்டோ

கூகுள் நிறுவனத்தின் பிரபல ஆப்-ஆன கூகுள் போட்டோ, பிளே ஸ்டோரில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிளே ஸ்டோரில் வெளியான இரண்டு ஆண்டுகளில் கூகுள் போட்டோ ஆப் இந்த சாதனையை படைத்துள்ளது. கூகுள் போட்டோ ஆப்பில் அன்லிமிடெட் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படுவதோடு, பல்வேறு புதிய வசதிகளுக்கான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

நானோ டிஸ்க்‘ முறை

ஆண்டுக்கு 20 லட்சம் பேர் மரணம் அடையும் உயிர் கொல்லி நோயான காச நோயை கண்டரிய ஒருவாரம் ஆகும் நிலையில்,  தற்போது புதிய முறையில் ரத்த பரிசோதனை மூலம் ஒரு மணி நேரத்தில் கண்டறிய  முடியும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு ‘நானோ டிஸ்க்‘ முறை என பெயர்.  இதன் மூலம் நோயாளிக்கு விரைவாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியுமாம்.

மோட்டார் வீடு

எலிசியம் என்ற பெயரிடப்பட்டுள்ள நகரும் சொகுசு வீடு ஒன்றை 45 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் இல்லத்தின் உள்பகுதியில் அமர்வதற்கான பெரிய அளவிலான சோஃபா மற்றும் படுக்கை வசதி, 75 இன்ச் திரையுடன் கூடிய எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்தும் சென்சார் சுவிட்சுகள் கொண்டதாக இருக்கிறது. இரண்டு பேர் தங்குவதற்கான சொகுசு படுக்கை வசதியுடன் ஒரு அறையும் உள்ளது.

கொழுப்பை கரைக்கும்

3 வாரங்கள் தினமும் ஒரு கப் காரட் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காரட்டில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்தினால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும் மாலைக் கண் நோயை தடுக்கும். புற்று நோயிலிருந்து காக்க காரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony