முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் மலாய் டிக்கா

Cooking time in minutes: 
30
Ingredients: 

சிக்கன் மலாய் டிக்கா செய்யத்தேவையான பொருள்கள்;

  1. பொடியாக நறுக்கிய போன்லெஸ் சிக்கன் - 200 கிராம்.
  2. துணியில் கட்டப்பட்ட தயிர் - 2 டேபிள் ஸ்பூன்.
  3. பிரஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்.
  4. அரைத்த முந்திரி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்.
  5. பொடியாக துருவிய சீஸ்  - 2 டேபிள் ஸ்பூன்.
  6. கஸ்தூரி மெத்தி - 1/2 டேபிள் ஸ்பூன்.
  7. சில்லி பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்.
  8. சாட் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்.
  9. சீரகப்பொடி - டேபிள் ஸ்பூன்.
  10. ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்.
  11. இஞ்சி,பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்.
  12. வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
  13. புதினா சட்னி - 2 டேபிள் ஸ்பூன்.
  14. ரீபைண்ட் ஆயில் - 100  மில்லி.
  15. உப்பு  - தேவையான அளவு.
  16. வெங்காயம்,கேரட்,இலைக்கோசு – சிறிதளவு.
  17. எலுமிச்சம் பழம் -1/2.
  18. குத்தக்கூடிய குச்சிகள் – 2.

Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய போன்லெஸ் சிக்கன் 200 கிராம், எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன், இஞ்சி,பூண்டு பேஸ்ட் ½  ஸ்பூன், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு 10 நிமிடம் பிரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பிரஷ் கிரீம் 2 டேபிள் ஸ்பூன், துணியில் கட்டப்பட்ட தயிர் 2 டேபிள் ஸ்பூன், பொடியாக துருவிய சீஸ் 2 டேபிள் ஸ்பூன், அரைத்த முந்திரி பருப்பு 2 டேபிள் ஸ்பூன்,கஸ்தூரி மெத்தி 1/2 ஸ்பூன், சீரகப்பொடி 1/2 ஸ்பூன், சாட் மசாலா 1/2 ஸ்பூன், ரீபைண்ட் ஆயில் ஒரு டேபிள் ஸ்பூன், சில்லி பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன், வெண்ணெய் 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, மற்றும் ஊற வைத்த சிக்கனை போட்டு நன்றாக கலந்து விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. குத்தக்கூடிய குச்சிகளை எடுத்து சிக்கன் துண்டுகளை ஒவ்வென்றாக சொருகி சிக்கன் துண்டின் அணைத்து பகுதிகளிலும் மசாலா கலவை படும்படி நன்கு முக்கி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் போடவும்.
  5. வெண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகள் உள்ள குச்சிகளை போட்டு குறைவான தணலில் பொரிக்கவும்.
  6. தொடர்ந்து குறைவான தணலில் 15 நிமிடங்கள் திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  7. நன்றாக பொரிந்து விட்டது, அடுப்பில் இருந்து சிக்கனை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
  8. சிறிதளவு வெங்காயம்,கேரட்,இலைக்கோசு மற்றும் புதினா சட்னி வைத்து பரிமாறவும்.
  9. சுவையான சிக்கன் மலாய் டிக்கா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்