முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் 65

Cooking time in minutes: 
20
Ingredients: 

சிக்கன் 65 செய்யத் தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் - 1/2  கிலோ.
  2. கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
  3. எலுமிச்சம்பழ சாறு - 1 ஸ்பூன்.
  4. கார்ன் பிளார் மாவு - 2 ஸ்பூன்.
  5. அரிசி மாவு - 1 ஸ்பூன்.
  6. முட்டை - 1.
  7. இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
  8. பச்சை மிளகாய் - 3. 
  9. மிளகாய் வத்தல் - 1.
  10. கறிவேப்பிலை,மல்லி - சிறிதளவு.
  11. சீரகத்தூள் - 1 ஸ்பூன். 
  12. ரெட் சில்லி சாஸ் - 2 ஸ்பூன்.
  13. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  14. உப்பு - தேவையான - அளவு.
Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் ½ கிலோ போன்லெஸ் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் தேவையான  அளவு உப்பு, ஒருஸ்பூன் கரம் மசாலா தூள்,எலுமிச்சம்பழ சாறு ஒருஸ்பூன்,கார்ன் பிளார் மாவு  2 ஸ்பூன்,அரிசி மாவு ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து விடவும்.
  3. ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து அதை சிக்கன் உள்ள பாத்திரத்தில் ஊற்றி கலந்து விடவும்.
  4. இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுததை போட்டு நன்றாக கலந்து விட்டு 45 நிமிடங்கள் சிக்கனை ஊற வைக்கவும்.
  5. அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய்  சூடானவுடன் மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை  எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  7. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  9. எண்ணெய்  சூடானவுடன் நறுக்கிய 3 பச்சை மிளகாய்,நறுக்கிய  ஒரு மிளகாய் வத்தல், ஒரு  ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,கறிவேப்பிலை சிறிதளவு மற்றும் சீரகத்தூள் ஒரு ஸ்பூன் போட்டு கலந்து விடவும்.
  10. இதனுடன் ரெட் சில்லி சாஸ்  2 ஸ்பூன் மற்றும் பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை போட்டு கலந்து விடவும்.
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான சிக்கன் 65 ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago