முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தந்தூரி சிக்கன்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

தந்தூரி சிக்கன் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. சிக்கன் லெக் பீஸ் - 2
  2. வெண்ணெய் - 1 ஸ்பூன்.
  3. இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
  4. முந்திரி மற்றும் சீஸ் அரைத்த விழுது - 1 ஸ்பூன்.
  5. தயிர் - 4 ஸ்பூன்.
  6. எலுமிச்சை பழ சாறு - 1 ஸ்பூன்.
  7. காஷ்மீர் சில்லி பவுடர் - 1 ஸ்பூன்.
  8. சில்லி பவுடர் - 1 ஸ்பூன்.
  9. கஸ்தூரி மெத்தி - 1/2 ஸ்பூன்.
  10. சீரக தூள் - 1/2 ஸ்பூன்.
  11. தனியா பவுடர் - 1 ஸ்பூன்.
  12. பிளாக் சால்ட் - 1/2 ஸ்பூன்.
  13. கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன் .
  14. ரெட் ரோகன் சிரப் -  2 ஸ்பூன்.
  15. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு. 
  16. உப்பு  - தேவையான அளவு.
Method: 

 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 2 சிக்கன் லைக் பீஸை எடுத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கத்தியை எடுத்து சிக்கன் லைக் பீஸை கீறி விடவும்.
  3. இதனுடன் இஞ்சி,பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு போட்டு நன்கு கலந்து விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் தயிர்  4 ஸ்பூன், முந்திரி மற்றும் சீஸ் அரைத்த விழுது ஒரு ஸ்பூன், கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்,காஷ்மீர் சில்லி பவுடர் 1/2 ஸ்பூன்,சில்லி பவுடர் 1/2 ஸ்பூன்,சீரக தூள் 1/2 ஸ்பூன்,தனியா பவுடர் 1 ஸ்பூன்,கஸ்தூரி மெத்தி 1/2 ஸ்பூன்,பிளாக் சால்ட் 1/2 ஸ்பூன், ரெட் ரோகன் சிரப் 2 ஸ்பூன் போட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
  5. ஊற வைத்துள்ள சிக்கன் மேல் இந்த மசாலா கலவையை சிக்கனின் அணைத்து பகுதியிலும் ஓட்டும் படி தடவி விட வேண்டும்.
  6. இதே போல் 2 சிக்கன் லெக் பீஸையும் தயார் செய்துகொள்ளவும்.
  7. ஒரு அடி நீளமுள்ள கம்பியை எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள சிக்கனை செருகி விடவும்.
  8. மீதமுள்ள மசாலா கலவையையும் சிக்கன் மேல் தடவி தந்தூரி அடுப்பில் 15 நிமிடம் வேக விடவும்.
  9. 15 நிமிடம் ஆகிவிட்டது தந்தூரி அடுப்பில் இருந்து சிக்கனை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
  10. சிக்கன் மேல் சிறிதளவு வெண்ணெய் ஊற்றவும்,சிறிதளவு சாட் மசாலா தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.
  11. சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்