முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பக்காலா மீன் வறுவல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

பக்காலா மீன் வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;

 1. பக்காலா மீன் (நெய் மீன்) – 200 கிராம்.
 2. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்.
 3. பொடியாக நறுக்கி  வறுத்த உருளை கிழங்கு - 50 கிராம்.
 4. ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்.
 5. முட்டை - 1. (கலக்கியது)
 6. மிளகுத்தூள் - தேவையான அளவு .
 7. பட்டர் - 1 ஸ்பூன்.
 8. வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு.
 9. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 ஸ்பூன்.
 10. துருவிய சீஸ் - 1 ஸ்பூன்.
 11. பிளாக் ஆலிவ் - 1 ஸ்பூன். 
 12. கிரீன் ஆலிவ் - 1 ஸ்பூன். 
 13. ரோஸ் மேரி 1/4 ஸ்பூன். 
 14. கற்பூர வள்ளி துளசி பொடி -1 சிட்டிகை.
 15. உப்பு - தேவையான அளவு .

Method: 

செய்முறை ;

 1. அடுப்பில் கிடாய் வைத்து 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றவும்.
 2. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 50 கிராம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 3. சுத்தம் செய்த பக்காலா மீன் – 200 கிராம், ஒரு சிட்டிகை வெள்ளை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை,கற்பூர வள்ளி துளசி பொடி ஒரு சிட்டிகை ரோஸ் மேரி, முட்டை (கலக்கியது) ஒன்று ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
 4. பொடியாக நறுக்கி வறுத்த உருளை கிழங்கு 50 கிராம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஒரு ஸ்பூன், பிளாக் ஆலிவ் ஒரு ஸ்பூன், கிரீன் ஆலிவ் ஒரு ஸ்பூன், துருவிய சீஸ் ஒரு ஸ்பூன் போட்டு கலந்து விடவும்.
 5. அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
 6. பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி விடவும்.
 7. சுவையான பக்காலா மீன் வறுவல் ரெடி.    

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!