முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பன்னீர் மஞ்சூரியன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

பன்னீர் மஞ்சூரியன் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. பன்னீர் - 300 கிராம்.
  2. மைதா மாவு - 4 ஸ்பூன்.
  3. கான் பிளவர் மாவு - 4 ஸ்பூன்.
  4. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன். 
  5. சோயா சாஸ் - 5 ஸ்பூன். 
  6. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  7. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  8. பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு.
  9. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
  10. நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - 1.
  11. சோம்பு - ஒரு ஸ்பூன்.
  12. மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
  13. சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்.
  14. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
  15. தக்காளி கெட்சப் - ஒரு ஸ்பூன்.
  16. பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
  17. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு தட்டில் 300 கிராம் பன்னீரை எடுத்து அதை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 
  2. ஒரு பாத்திரத்தில் நீளமாக நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போடவும்,இதனுடன் 4 ஸ்பூன் மைதா மாவு,கான் பிளவர் மாவு 4 ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,சோயா சாஸ் 2 ஸ்பூன்,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,  மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய்  சூடானவுடன் மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை  ஒவ்வொன்றாக  எண்ணெயில் போட்டு பொறிக்கவும்,திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  7. இதனுடன் நீளமாக நறுக்கிய ஒரு குடைமிளகாய்,சோம்பு ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,தக்காளி கெட்சப் ஒரு ஸ்பூன் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  8. இதனுடன் 2 ஸ்பூன் கான் பிளவர்மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி எண்ணெயில் பொறித்த பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.
  9. பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை தூவி விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான பன்னீர் மஞ்சூரியன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்