Idhayam Matrimony
முகப்பு

முள்ளுமுருங்கை ரொட்டி

Cooking time in minutes: 
20
Ingredients: 

முள்ளுமுருங்கை ரொட்டி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொடியாக நறுக்கிய முள்ளுமுருங்கை இலை - 15.
  2. முள்ளுமுருங்கை இலை - 15.
  3. அரிசி - 1/4 கிலோ.
  4. மிளகு -15.
  5. சீரகம் - 1/4 ஸ்பூன்.
  6. சின்ன வெங்காயம் - 4.
  7. ரிபைன்ட்  ஆயில் 300 மில்லி. 
  8. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. 15 முள்ளுமுருங்கை கீரையை எடுத்து நடுவில் உள்ள காம்பை நீக்கி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 1/4 கிலோ அரிசியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. மிக்சி  ஜாரில் மிளகு 15,சீரகம் 1/4 ஸ்பூன்,உப்பு தேவையான அளவு மற்றும் ஊறவைத்த 1/4 கிலோ அரிசியை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக  அரைத்து  தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. மிக்சி  ஜாரில் சின்ன வெங்காயம் 4, சுத்தம் செய்த 15 முள்ளுமுருங்கை கீரை மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி  அரைக்கவும்.
  5. இதனுடன் அரைத்து  வைத்துள்ள அரிசி மாவை போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக அரைக்கவும்.
  6. தயார் செய்து வைத்துள்ள மாவை வடைக்கு தட்டுவது போல் தட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட்  ஆயில் 300  மில்லி ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும். 
  9. திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  10. சுவையான முள்ளுமுருங்கை ரொட்டி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்