எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை - முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி நிலையில் உள்ளது.என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவி த்துள்ளார்.
சட்டசபையில் நேற்று சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:,
புதிய தொழில் தொடங்குவதன் மூலம் மாநிலம் வளர்ச்சி பெறுவதுடன், வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுவதால், தொழில்கள் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை, மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. புதிய தொழில் கொள்கை, வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் கொள்கை, மற்றும் உயிரி தொழில்நுட்பக் கொள்கை ஆகியவை 2014 ஆம் ஆண்டு இதயதெய்வம் அம்மா அவர்களால், வெளியிடப்பட்டன. தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இதுவன்றி, தனியார் துறையில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுச் சட்டம் 2012, என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்களில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கு, இது வகை செய்கிறது.
தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்குத் தேவையான உகந்த சூழல் நிலவுவதாலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலம் பேணுகிற சமூக, பொருளாதார சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாலும், முதலீட்டாளர்கள் அனைவரும் விரும்பி வந்து தொழில் முதலீடு செய்கிற பாதுகாப்பான இடமாக, தமிழ்நாடு விளங்குகிறது. மாநிலங்களின் வளர்ச்சி அளவைகளின்படி, தமிழ்நாடு முன்னோடி நிலையில் உள்ளது.
இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தைச் சேர்ந்த, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்ட, அந்நிய நேரடி முதலீட்டு புள்ளி விவரங்களின்படி, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், மகாராஷ்டிரம், புதுடெல்லி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து, தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. மே 2011 முதல் நவம்பர் 2014 வரையிலான கால கட்டத்தில், தமிழ்நாடு 48 ஆயிரத்து 192 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (ஊஆஐநு) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 2011 ஆம் ஆண்டு கு அம்மா அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல், செப்டம்பர் 2014 வரையிலான காலக் கட்டத்தில், தமிழ்நாடு ஈர்த்துள்ள கூடுதல் முதலீடு 2 லட்சத்து 58 ஆயிரத்து 382 கோடி ரூபாயாகும். இந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்பவர்கள், ஊஆஐநு-ன் இணைய தளத்திலிருந்து அதனைத் தெரிந்து கொள்ளலாம்.
முதலீடுகளை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
இந்திய அரசின் தொழில் கொள்கை - உருவாக்கத் துறை வெளியிட்ட, """"தொழில் நிதி உதவிக்கான செயலகம் (ளுஐஹ) புள்ளி விவரங்கள்"" என்னும் நூலில், முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் மிகவும் விரும்பித் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு அம்மா அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. இவற்றின் முதலீட்டு அளவு 31 ஆயிரத்து 706 கோடி ரூபாயாகும். இது தவிர, தொழில் துறையின் கீழ் உள்ள, வழிகாட்டு மையம் , ஒற்றைச் சாளர முறையின் வாயிலாக 42 திட்டங்கள் மூலம், கூடுதலாக 9 ஆயிரத்து 379 கோடி ரூபாய் ஈர்த்துள்ளது. மொத்தத்தில் கடந்த 3 ஆண்டுகளில், 75 திட்டங்களின் வாயிலாக ஈர்க்கப்பட்ட மொத்த முதலீடு 41 ஆயிரத்து 85 கோடி ரூபாயாகும். இது தவிர, 17 ஆயிரத்து 134 கோடி முதலீடு செய்வதற்கு, 7 புதிய திட்டங்களுக்கு, அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்வின் போது கையெழுத்திடப்படும்.
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமும், அரசாணைகள் மூலமும் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த முதலீட்டுத் தொகை 66 ஆயிரத்து 664 கோடி ரூபாய் ஆகும். ஆனால் இதில் 15 ஆயிரத்து 982 கோடி ரூபாய்க்கான 12 தொழில்கள் தொடங்கப்படவே இல்லை. எஞ்சிய 50 ஆயிரத்து
682 கோடி ரூபாயில், நான்காயிரம் கோடி ரூபாய், ஹூண்டாய் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் அடங்கும். 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், பரிசீலனையில் இருந்து, தொழில் துவங்கப்பட்ட இந்த ஹூண்டாய் நிறுவனம், 2.2.2008-ல் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே துவங்கப்பட்ட இதனையும் நீக்கி விட்டால், எஞ்சிய தொகை 46 ஆயிரத்து 682 கோடி ரூபாய் தான். அதிலும் மைனாரிட்டி திமுக ஆட்சி முடியும் வரை செய்யப்பட்ட முதலீடு, 25 ஆயிரத்து 126 கோடி ரூபாய் தான். ஆனால் மே 2011 முதல் டிசம்பர் 2014 வரை செய்யப்பட்ட முதலீடு, 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும்.
ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஏதுவாக, ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பு சென்னையில் ஒரு வர்த்தக ஆதரவு மையத்தினை ஏற்படுத்தியுள்ளது. 2011-ஆம் ஆண்டு மே மாதம், மாண்புமிகு அம்மா அவர்களது தலைமையில் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாடு அரசு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதரவுடன், 970 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது சுமார் 5 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 18 ஜப்பானிய பெரும் தொழில் நிறுவனங்களை நிறுவ, ஜப்பான் வர்த்தக அமைப்பு, வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவை தவிர, 300க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அமையப் பெற்றுள்ளன. ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு, புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதால், வேலை வாய்ப்பும் பெருகி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ன் கணக்குப்படி, 31.3.2006 நாளைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, 55 லட்சத்து 10 ஆயிரமாகும். 31.3.2011 நாளைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 21 ஆயிரத்து 904 ஆகும். அதாவது, முந்தைய திமுக ஆட்சியில் பதிவுடன் ஏற்படுத்தப்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் 29 லட்சத்து 12 ஆயிரம் ஆகும். 31.12.2014 அன்றைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1 கோடியே 64 லட்சத்து 38 ஆயிரத்து 84 ஆகும். அதாவது, கடந்த நான்காண்டுகளில், 80 லட்சத்து 16 ஆயிரத்து 180 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களான, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டால், தென் தமிழகமும் தொழில் வளர்ச்சி அடையும் என்பதால், இந்தப் பகுதிகளில் தொழில் துவங்க முனைவோருக்கு, பல்வேறு சலுகைகளை, மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்தப் பூங்காக்களை ஏற்படுத்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொழில் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரிதும் உதவி வருவதால், அவைகளை ஊக்குவிக்கும் வகையில் சுலபமான கடன் வசதி, தொழில்நுட்ப வசதி, எளிய விற்பனை வசதி, கட்டமைப்பு வசதிகள் போன்ற, பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. புதிதாக துவங்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வழங்கப்படும் முதலீட்டு மானியம் 15 விழுக்காட்டிலிருந்து
25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 593 நிறுவனங்களுக்கு 230 கோடியே 30 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
வேலையில்லா இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ்,
1 லட்சம் ரூபாய் முதல்5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன்வருவோருக்கு, திட்ட மதிப்பீட்டில் 15 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 75 ஆயிரம் ரூபாய் என்றிருந்த மானிய உதவி,
25 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என, கடந்த ஆண்டு முதல், உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இது வரை, 2 ஆயிரத்து 63 தொழில் முனைவோருக்கு 9.56 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு, மாண்புமிகு அம்மா அவர்களது தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இது வரை, 685 ஏக்கர் பரப்பில் 14 புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 14 இடங்களில் 19 கோடி ரூபாய் செலவில், தொழிற் பேட்டைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிட்கோ நிறுவனத்தால் 247 கோடி ரூபாய் மதிப்பில், 590 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; 11 கோடி ரூபாய் மதிப்பிலான 26 தொழிற்கூடங்கள் தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2006 முதல் 2011 வரையிலான, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 160 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமே புதிதாகப் பதிவு செய்யப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு மூன்றாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், 2015 ஆம் ஆண்டு ஜனவரி வரை, மொத்தம் 3.94 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பதிவானதை விட, கூடுதலாக 2.16 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை, மிகவும் பெருமையுடன் இந்த அவையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
முனைப்பான மின் திட்டங்கள்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
2011 ஆம் ஆண்டு மே மாதம், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், 4 ஆயிரத்து 640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு, தற்போது கிடைத்து வருகிறது. இது தவிர, வல்லூர் மூன்றாம் அலகிலிருந்து, நமது பங்காக 350 மெகாவாட் மின்சாரம், இன்னும் சில நாட்களில் கிடைக்கப் பெறும். மேலும், 2 ஆயிரத்து 163 மெகாவாட் மின்சாரம் இன்னும் சில மாதங்களில் கிடைக்கும்.
இது தவிர, 660 மெகாவாட் திறன் கொண்ட, எண்ணூர் அனல் மின் திட்டம், 1,320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம், என 1,980 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களுக்கான பணிகள் துவக்கப்படவுள்ளன.
இது தவிர, எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம் மற்றும் உப்பூர் அனல் மின் திட்டம் ஆகியவற்றின் மூலம், 2 ஆயிரத்து 260 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், வடசென்னை அனல் மின் திட்டம் மூன்றாம் நிலை (800 மெகாவாட்), உடன்குடி அனல் மின் திட்டம் விரிவாக்கம் (2 ஒ 660 மெகாவாட்), தூத்துக்குடி அனல் மின் திட்டத்திற்கான மாற்று திட்டம் (2 ஒ 660 மெகாவாட்) என மொத்தம் 3 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சார திட்டங்களுக்கான சுற்றுச் சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவன்றி, மத்திய அரசால் நிறைவேற்றப்படவுள்ள 4,000 மெகாவாட், செய்யூர் அனல் மின் நிலையத்தில் நமது பங்காக 1,600 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கப் பெறும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அரசால் முடிக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், 2000 மெகாவாட் திறனுள்ள சில்லஹல்லா நீரேற்றும் மின் திட்டத்திற்கான ஆய்வுப் பணி, மற்றும் 500 மெகாவாட் திறனுள்ள, குந்தா நீரேற்றும் மின் திட்ட பணிகள், ஆகியவை முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. மேலும், 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு, நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் வாங்குவதற்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில், 16 ஆயிரத்து 33 மெகாவாட் அனல் மின் உற்பத்திக்கும்,2 ஆயிரத்து 607 மெகாவாட் புனல் மின் உற்பத்திக்கும், நீண்ட காலக் கொள்முதல் மூலம் 3 ஆயிரத்து 300 மெகாவாட், மற்றும் நடுத்தர கால கொள்முதல் மூலம்,
500 மெகாவாட், என மொத்தம் 22 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இந்த அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர், இது வரை முடிக்கப்பட்ட திட்டங்கள், நடுத்தர கால மற்றும் நீண்டகாலக் கொள்முதல் ஆகியவற்றின் வாயிலாக 4 ஆயிரத்து 640 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. எனவே தான், மின் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டு, மின் தேவையை முழுவதும் பூர்த்தி செய்யும் நிலையை, எட்டிக் கொண்டு இருக்கிறோம். !இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை
11 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் கடுமையாக இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் வான்சிடம், பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உ
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.