முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான்: தம்பிதுரை அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா தான் என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.

மக்களவை துணைசபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான டாக்டர் தம்பிதுரை வெளியிட்ட அறிக்கை வருமாறு: அதிமுக தமிழக மக்களின் உயர்வுக்காகவும் மேன்மைக்காகவும் உருவாக்கப்பட்ட ஒப்பற்ற இயக்கம். இது தான் அண்ணா கண்ட உண்மையான திராவிட இயக்கம். தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டுதங்களை வாழ்விக்க வந்த மகானாக எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டு கொண்டனர். எல்லையில்லா வண்ணம் தன்னை நேசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர் மக்களுக்காக உருவாக்கிய இயக்கம் அதிமுக  அன்று முதல் இன்று வரை இனிவரும் காலங்களுக்கும் மக்களால் அதிமுக மக்களுக்காக அதிமுக என்பது தான் வரலாறு . இத்தனை சிறப்பு வாய்ந்த இயக்கத்தை தனக்கு பிறகு வழிநடத்த எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவர் ஜெயலலிதா மக்களுக்கால் நான். மக்களுக்காக நான். என்பதே அம்மாவின் தாரக மந்திரம், சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வினை உறுதி செய்யவும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும், இந்திய குடியரசில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டவும் தன்னையே அர்ப்பணித்து எம்.ஜி.ஆர் காட்டிய புனிதப்பாதையில் வாழ்ந்த அம்மா இன்று நம்மிடையே இல்லாத சூழலில் அதிமுக சிறப்புற வழிநடத்தும் தகுதியும் ஆற்றலும் அறிவும் அனுபவமும் ஒருங்கே அமைய பெற்றவர் சின்னம்மா மட்டுமே.
 
அகில இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கும் அறியப்பட்ட இயக்கமாக முதல்வர் ஜெயலலிதா,உருவாக்கப்பட்ட அதிமுகவையும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் வழிநடத்தி காப்பாற்ற காலம் நமக்களித்திருக்கும் கொடையாக சின்னம்மா திகழ்கிறார்கள், கடந்த 35 ஆண்டுகளாக ஜெயலலிதாவோடு நெருங்கி பழகி அவரோடே வாழ்ந்து அவர்களுக்காக எல்லா வகையான தியாகங்களையும் செய்திருப்பவர் சின்னம்மா, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்குகளில் சிறை சென்று கொடுமைகளுக்கு ஆளானவர், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அனைத்திலிருந்தும் அவரை காப்பாற்றியவர், கட்சி நிர்வாகத்திலும் ஆட்சி நடத்துவதிலும் அரிய ஆலோசனைகள் வழங்கி உறுதுணையாய் நின்றவர் என்று சின்னம்மாவின் சிறப்பு இயல்புகளை ஏராளமாக பட்டியலிடலாம்.

தேர்தல் பணிகளிலும் கழகம் முக்கிய முடிவுகளை எடுக்க நேர்ந்த தருணங்களிலும் தன்னுடைய எண்ண ஓட்டங்களையும் திட்டங்களை செயல்படுத்தும் முயற்சிகளையும் அறிந்து கொள்ள என்னை போன்ற கழக நிர்வாகிகளை ஜெயலலிதா,சி்ன்னம்மாவின் ஆலோசனைகளை பெற்றுசெயல்படுமாறு பணித்திருக்கிறார்கள் . அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் என்று முறையில் என்னுடைய பணிகளுக்கு அரிய பல வழிகாட்டுதல்களையும் சின்னம்மா அளி்த்திருக்கிறார்கள்., பல்வேறு சோதனைகளையும் சரித்திர நிகழ்வுகளையும் ஜெயலலிதாவோடு தோளோடு தோள் நின்று எதிர்கொண்ட சின்னம்மா அதிமுகவை வழிநடத்த தேவையான தலைமைப்பண்புகள் நிறைந்தவர்.

பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். அம்மா அவர்களின் வழியில் சாதி, மத வேறுபாடுகளை கடந்து தொண்டர்களை அரவணைத்து பாதுகாத்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆற்றல் நிறைந்தவர் சின்னம்மா ஒருவர் மட்டுமே அம்மா வாழ்ந்த காலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்இருந்தே ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்க தொடங்கிய நாளில் இருந்தே அவர்களுக்கு துணையாக இருந்து செயல்பட்டவரை அனைவரும் சி்ன்னம்மா என்று அழைக்கத்தொடங்கினோம். அப்படி அழைப்பதை அம்மாவும் ஏற்று அங்கீகரித்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுவே சின்னம்மாவே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பது அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்கு அறிந்த ஒன்றாகும்.  என்னை போன்ற அதிமுக தொண்டர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று சின்னம்மா அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்று அதிமுகவையும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் தமிழகத்தையும் காக்க வேண்டும் என நன்றிப்பெருக்கோடும், நல்லெண்ண வாழ்த்துக்களோடும் கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago