முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபரேஷன் சிந்தூர் - சச்சின் வரவேற்பு

வியாழக்கிழமை, 8 மே 2025      விளையாட்டு
Tendulkar 2025-01-17

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று  தனது சமூக வலைதளப் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுளள பதிவில் கூறியுள்ளதாவது: ஒற்றுமையில் நாம் அச்சமற்று இருக்கிறோம். அதேபோல் வலிமையில் எல்லையற்றதாக இருக்கிறோம். இந்தியாவின் கேடயம் அதன் மக்கள். ஒற்றுமைக்கான செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும்போது இந்த உலகில் தீவிரவாதத்துக்கு இடம் கிடையாது. நாங்கள் ஒரே அணி. ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் ஹேஷ்டாக்கையும் இணைத்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், ஷிகர் தவான், யூசுப் பதான், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், செஸ் வீரர் விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

வருண் சக்கரவர்த்தி சாதனை 

ஐ.பி.எல். போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சி.எஸ்.கே. அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் (மே.7) வீழ்த்தியது. தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணிக்காக சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

இதற்காக வருண் சக்கரவர்த்திக்கு திண்டுக்கல் டிராகன்ஸ், கே.கே.ஆர். அணிகள் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் ஐ.பி.எல். விதிமுறை 2.5-இன் படி லெவல் 1 குற்றத்திற்காக கேகேஆர் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் இந்தியா

 இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 5-வது லீக்கில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மீண்டும் மோதியது.  பொறுப்பு கேப்டன் குளோ டிரையான் டாஸ் ஜெயித்து முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்தியா 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது.  

அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா,  50 ஓவர் முடிவில்  7 விக்கெட்டுக்கு 314 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 3-வது வெற்றியை பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து 3 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய தென்ஆப்பிரிக்கா வெளியேறியது. வருகிற 11-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை சந்திக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து