முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனவலிமைதான் முக்கியம்: இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை

வியாழக்கிழமை, 8 மே 2025      விளையாட்டு
Dhoni 2023 04 29

சென்னை, தொழில்நுட்ப ரீதியாக திறமை வாய்ந்தவர்கள் எப்போதும் ரன்களை குவிப்பதில்லை. மனவலிமை முக்கியம் என எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.

இளம் வீரர்கள்...

ஐ.பி.எல். போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை  (மே.7) வீழ்த்தியது. காயம் காரணமாக ருதுராஜ் விலக தோனி கேப்டன் ஆனார். இருப்பினும், சி.எஸ்.கே. அணியின் தோல்வியைத் தவிர்க்க இயலவில்லை. தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டரில் சொதப்பிய சி.எஸ்.கே. அணியை முற்றிலுமாக தோனி மாற்றியமைத்துள்ளார். காயம் காரணமாக விலகிய வீரர்களுக்குப் பதிலாக அதிரடியான இளம் வீரர்களை தோனி தலைமையில் சி.எஸ்.கே. நிர்வாகம் நியமித்துள்ளது. நேற்று முன்தினம் போட்டியில் அறிமுகமான உர்வில் படேல் 11 பந்துகளில் 31 ரன்களும் டெவால்டு பிரீவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.

சாதகமாக இல்லை...

இது குறித்து தோனி பேசியதாவது: இந்த சீசனில் அதிகமாக வெற்றி பெறவில்லை. இப்போதுதான் 3 போட்டிகளை வென்றுள்ளோம் (சிரிக்கிறார்). சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. அதைப் பற்றிப் பேசினால் உணர்ச்சிகள் எழலாம். அணியின் பெருமிதம் என்ற விஷயமும் இருக்கிறது. ஆனால், நாம் எதார்த்தமாக இருக்க வேண்டும். 25 வீரர்களில் யார்யார் எங்கு பொருந்துவார்கள் என்பதை கண்டறிவதில் கவனமாக இருக்கிறோம்.

மனவலிமை முக்கியம்...

போட்டியிடவும் வேண்டும், அதேசமயம் சில கேள்விக்கு பதிலும் கண்டறிய வேண்டும். பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் எங்கு பயன்படுத்த வேண்டும், எந்தச் சூழலில் யார் பொருத்தமானவர்கள் என அறிய வேண்டும். முதலில் யாருமே சரியாக விளையாடவில்லை. தொடரிலிருந்தும் வெளியேறிவிட்டோம். அதனால், மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம். இதில் முக்கியமாக நாங்கள் ஒருவரது மனவலிமையை சோதிக்கிறோம். தொழில்நுட்ப ரீதியாக திறமை வாய்ந்தவர்கள் எப்போதும் ரன்களை குவிப்பதில்லை. மனவலிமை முக்கியம். போட்டி குறித்தான விழிப்புணர்வும் முக்கியம். இவைகள் இருந்தாலே ஒருவர் தொடர்ச்சியாக நன்றாக விளையாட முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து