முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 8 மே 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும்  18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்களையும்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தனித்தனி விடுதிகள்...

பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 19.65 கோடி ரூபாய் செலவில் கட்டிப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டிடத்தையும், தரை மற்றும் நான்கு தளங்களுடன் தலா 18.91 கோடி ரூபாய் செலவில் கட்டிப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான தனித்தனி விடுதிக் கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

10 மாவட்டங்களில்... 

அரசுப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு பல முன் மாதிரித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் போக்கவும், அரசுப் பள்ளி மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதை ஊக்கப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் 2021-22ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு, அம்மாவட்டத்தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த மாதிரிப் பள்ளிகளில் உண்டு உறைவிட வசதியுடன் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

15 மாவட்டங்களில்... 

இதன் விளைவாக முதலாம் ஆண்டிலேயே 75 மாணவர்களுக்கு நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில இடம் கிடைத்தது. 2022-23ம் ஆண்டில் மேலும் 15 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, அந்த ஆண்டு 274 மாணவர்களுக்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தது. அத்துடன் இரண்டு மாணவிகள் தாய்வான் நாட்டின் முழு கல்வி உதவித் தொகைப் பெற்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கச் சென்றனர்.

38 மாதிரிப் பள்ளிகள்... 

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒன்று என 38 மாதிரிப் பள்ளிகள் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. தனியார் மற்றும் அரசுக் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள இம்மாதிரிப் பள்ளிகளுக்கு நிரந்தர இடம் அமைக்கும் பொருட்டு, கடந்த 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதல் கட்டிமாக திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 56.47 கோடி ரூபாய் செலவில் புதியக் கட்டிடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதல்வர் கலந்துரையாடல்...

அதன் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக்கான இடம் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஒதுக்கப்பட்டு, தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 54,676 சதுர அடி கட்டிட பரப்பளவில் 19.65 கோடி ரூபாய் செலவில் வகுப்பறைகள், பணியாளர் அறை, நூலகம், பல்நோக்கு அறை, கழிவறைகள், விளையாட்டுத் திடல், கலையரங்கம், ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டிப்பட்டுள்ளது. மேலும், தரை மற்றும் நான்கு தளங்களுடன் தலா 73,172 சதுர அடி பரப்பளவில் தலா 18.91 கோடி ரூபாய் செலவில், சுமார் 440 மாணவர்கள் மற்றும் 440 மாணவியர்கள் தங்குவதற்குரிய தனித்தனி விடுதிக் கட்டிடங்கள் கட்டிப்பட்டுள்ளன. முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் அப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். பின்னர், அப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகள், கலையரங்கம், கணினி ஆய்வகம் போன்றவற்றை பார்வையிட்டதோடு, மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து