முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் மாநிலத்தில் அம்மா உணவகம் திறப்பு மக்களுடன் சேர்ந்து சாப்பிட்ட முதல்வர் வசுந்தரா

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர்   -  ராஜஸ்தான் மாநிலத்தில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இதில் மாநில முதல்வர்  வசுந்தரா ராஜேசிந்தியா மக்களுடன் சேர்ந்து மலிவு விலை உணவருந்தினார்.  மறைந்த  முதலமைச்சர்  ஜெயலலிதாவின் நடவடிக்கையால் உருவான அம்மா உணவக திட்டத்தை பின்பற்றி, ராஜஸ்தான் மாநிலத்திலும் அம்மா உணவகங்கள்திறக்கப்பட்டுள்ளன. அம்மாநில முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்த திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது. அனைத்து மக்களும் குறைந்த செலவில் உணவகத்தை பயன்படுத்தி பசியாறிக் கொண்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தை பின்பற்றி ராஜஸ்தான் மாநிலத்தில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அண்ணபூர்ணா என்ற பெயரில் முதல்கட்டமாக 12 நகரங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அம்மாநில முதலமைச்சர்  வசுந்தரா ராஜேசிந்தியா, மக்களுடன் சேர்ந்து உணவருந்தினார். காலை சிற்றுண்டி 5 ரூபாய்க்கும், மதியம் மற்றும் இரவு உணவுகள் 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தமிழகத்தை போல் ராஜஸ்தான் மாநில மக்கள் மத்தியில் அம்மா உணவகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago