முக்கிய செய்திகள்

இந்திய ராணுவத்திற்காக கார்களை உற்பத்தி செய்யும் 'டாடா'

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      மோட்டார் பூமி
Tata safari

Source: provided

டாடாவின் சஃபாரி எஸ்யூவி மாடல் கார் இந்திய ராணுவத்துக்குரிய புதிய வாகனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மாருதி ஜிப்ஸி காருக்கு மாற்றாக புதிய மாடலை தேர்வு செய்வதற்காக இந்திய ராணுவம் மலையேறுதல், பனி, பாலைவனம், சதுப்பு நிலம் என பல தரப்பட்ட சோதனைகளுக்கு பல வாகனங்களை உட்படுத்தியது.

அதில் உள்நாட்டு உற்பத்தியாளர்களான டாடா நிறுவனத்தின் சஃபாரி ஸ்ட்ரோம் மற்றும் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ மாடல்களும் சோதனையில் வெற்றி பெற்றது. இருப்பினும் நிதி ஒப்பந்தம் வாயிலாக ஸ்கார்ப்பியோவை பின்னுக்கு தள்ளி சஃபாரி வெற்றி பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்காக முதற்கட்டமாக 3192 கார்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் எதிர்வரும் நாட்களில் இதுபோன்று 10 மடங்கு கூடுதலான ஆர்டர்களை பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: