முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      விளையாட்டு
3-Ram-98

Source: provided

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ளது. மகளிர் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பரிசுகளும் குவிந்து வருகின்றன. பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கிராந்தி கௌட்டுக்கு, மத்திய பிரதேச மாநில அரசு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. மிதவேகப் பந்து வீச்சாளரான இவர் இறுதிப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் 6 ஓவர்கள் வீசி 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். உலக கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

உலக கோப்பையுடன் தூக்கம்

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரின் டி சர்ட்டில் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு மட்டுமல்ல , அனைவருக்குமான விளையாட்டு" என்று எழுதப்பட்டுள்ளது. முன்னதாக கால்பந்து உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி, டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் ஆகியோர் உலக கோப்பையுடன் தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

ஸ்மிருதி மந்தனா கொண்டாட்டம்

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது காதலன் பலாஷ் முச்சலுடன் உலக கோப்பை வெற்றியை கொண்டாடினார். ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பலாஷ் முச்சல் இசையமைப்பாளராக உள்ளார். சில ஆல்பங்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார். ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடிக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

விக்டோரியா எம்போகோ சாம்பியன்

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் விக்டோரியா எம்போகோ (கனடா) - கிறிஸ்டினா புக்ஸா (ஸ்பெயின்) மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. ஆனால் அந்த செட்டை எம்போகோ எளிதில் கைப்பற்றினார். எம்போகோ இந்த ஆட்டத்தில் 7-5, 6-7 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

அர்ஜென்டினா அணி கேரளா வருகை

நடப்பு உலக சாம்பியனான லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த மாதம் கேரளா வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பயணத்தின் போது அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி கொச்சியில் வரும் 17-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் கேரளா வருகை திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த தகவலை அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனமும், இந்த போட்டியை ஏற்பாடு செய்து வரும் நிறுவனமும் தெரிவித்தன. இது குறித்து இந்த போட்டியை ஏற்பாடு செய்து வரும் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘சர்வதேச கால்பந்து சங்கத்திடம் (பிபா) இருந்து போட்டிக்கான ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்துடன் கலந்து ஆலோசித்ததில் கொச்சியில் நவம்பரில் நடக்க இருந்த நட்புறவு கால்பந்து போட்டியை தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கேரளாவிற்கு வருகை தந்து ஒரு போட்டியில் விளையாடும் என்று கேரள விளையாட்டு மந்திரி வி. அப்துர் ரஹ்மான் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து

பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மிகவும் அற்புதமான முதல் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். முழு நாட்டிற்கும் ஒரு உண்மையான வரலாற்று நாள். என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து