முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      தமிழகம்
Vijay 2024-11-25

Source: provided

சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத தி.மு.க. அரசு வெட்கப்பட வேண்டும் என த.வெ.க. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்பதற்கு, கோவை தனியார் கல்லூரி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறை மற்றுமொரு சாட்சி. போதை கலாச்சாரத்தால் தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள் என்று பலமுறை வலியுறுத்தியும் இந்த போலி ‘அப்பா’ மாடல் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் முறையாக எடுக்காத காரணத்தால், போதையின் பாதையில் சென்ற அந்த கூட்டம் நேற்று முன்தினம் (2-11-2025) இரவு கோவை மாநகர் விமானநிலையம் ஒட்டியுள்ள பகுதியில், தனியார் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.

தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத தி.மு.க அரசு வெட்கப்பட வேண்டும். குற்றவாளிகள் அச்சமின்றி சுற்றுகிறார்கள், ஏனெனில் முதல்வரின் இரும்புக் கை, தமிழ்நாட்டு மகள்களை அல்ல… தி.மு.க. அமைச்சர்களை அமலாக்கத் துறையில் இருந்து காப்பாற்ற தான் பயன்படுகிறது. தி.மு.க. ஆட்சி அராஜகம் செய்பவர்களுக்கான ஆட்சி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து