முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      தமிழகம்
Ilayaraja-2024-10-27

Source: provided

சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு கொழும்பில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் மகள் பவதாரிணிக்காக, ஆர்கெஸ்ட்ரா ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருந்தார் இளையராஜா.

இந்நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திறமை, விருப்பம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறும் இளையராஜா கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் `என்னுடைய மகள் பவதராணியின் நினைவாக, ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா’வை உருவாக்க முடிவெடுத்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்கிற மெயிலுக்கு தங்களின் விவரங்களை அனுப்பலாம்' என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து