முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து அதை தள்ளுபடி செய்தது.

நாட்டில் உள்ள சிறார்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் 14 வயது முதல் 18 வயதுடைய சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பது போல, இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

நாடு முழுவதும், சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி, சிறார்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், வாழ்க்கை சீரழிந்து வருகிறது. பல இடங்களில் ரீல்ஸ் மோகத்தால் உயிரை இழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. நேபாளத்தில் சமூக வலைத்தளப் பயன்பாட்டை நிறுத்தியதால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதை பார்த்தீர்களா? என்று சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடியில், ரயில் மீது ஏறி ரீல்ஸ் எடுக்க முயன்ற இளைஞர், மின்சாரம் தாக்கி பலியானார். அதுபோல, அண்மையில் நேபாளத்தில், சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் ஜென் இசட் இளைஞர்கள், கொதித்தெழிந்து மிகப்பெரிய வன்முறையை அரங்கேற்றியிருந்தனர். இது அந்நாட்டில் ஆளும் அரசு கவழிக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து