முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவ மனையில் நுரையீரல் புற்றுநோய் நவீன சிகிச்சை குறித்த பயிலரங்கம்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      நீலகிரி

கோவை ஏப்-20

கோவை குப்புசாமி நாயடு மருத்து மனையில் நுரையீரல் துறை சார்பில் நுரையீரல் சார்ந்த புற்றுநோய் குறித்த நவீன சிகிச்சை குறித்த பயிலரங்கம் குப்புசாமி நாயுடு மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.

இதுகுறித்து  ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுச்சாமி நுரையீரல்துறை  இயக்குநர் டாக்டர் பரணிதரன் கூறியதாவது.

உலக அளவில் ஆண்கள் புற்றுநோயினால் இறப்பதற்கு முதன்மையான காரணமாக இருப்பது நுரையீரல் புற்றுநோய் ஆகும். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த பின்னர் இந்நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 நோயாளிகளில் 1 நோயாளி மட்டுமே உயிர் பிழைக்க முடிகிறது என்பதுதான் வேதனையான உண்மை. இதற்கான முக்கிய காரணம் மிகவும் காலம் கடந்த நிலையில் நோயாளிகளை மருத்துமனைக்கு சிகிச்சை பெற அழைத்து வருதலே ஆகும். ஆரம்ப கட்டத்திலேயே நோயினை கண்டறிதல் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் தீவிரத்தன்மையை ஆய்வு செய்து அதற்கேற்ப உரிய மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதன் மூலமாக இந்நோயிலிருந்து மீண்டு உயிர்பிழைக்கும் நோயாளிகளின் விகிதமானது 70 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் மட்டுமல்லாது. நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நோய்கள், நுரையீரல் சுருக்கம், ஆஸ்துமா, கோபிடி முதலிய நோய்களையும் நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் வாயிலாக முற்றிலும் குணப்படுத்தி நோயாளிகள் உயிர்பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்கச்செய்ய இயலும். இத்தகைய சிகிச்சைகளில்தான் இன்டர்வென்சனல் பலுமோனாலாஜி சிகிச்சை முறையானது மிகப்பெரிய உதவியாக திகழ்கிறது. நுரையீரல் சார்ந்த மருத்துவ சிகிச்சை முறையில் இன்டர்வென்சனல் பலுமோனாலாஜி ஆனது ஒரு புதிய சிறந்த அதிநவீன மருத்துவ சிகிச்சையாக திகழ்ந்து வருகிறது. அறுவை சிகிச்சையின்றி நோயினை கண்டறிவதற்கான மருத்துவ சாதனத்தை நோயாளியின் உடலில் குறைந்த அளவில் உட்செலுத்தி நுரையீரல் நோய்களை கண்டறிந்திடவும் மற்றும் அதற்கான உரிய சிகிச்சைகளை அளிப்பதற்கும் இது மிகுந்த பயனள்ளதாக அமைந்துள்ளது.

இதனால் எங்கள் ஜ.கே.என்.எம் மருத்துவ மனையில் மேற்கண்ட இன்டர்வென்சனல் பலுமோனாலாஜி சிகிச்சைகளை மிகக்குறைந்த செலவில் நோயாளிகளுக்கு அளிப்பதற்கான பிரத்தியேக சேவை மையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இது சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இதற்கான பயிலரங்களம் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் வகையில் வருகிற 21ந்தேதி நாளை வெள்ளிக்கிழமை அன்று பயிலரங்கம் நடைபெறுகிறது. இதில் நுரையீரல்துறை மருத்துவ நிபுணர்கள் ஜி.கே.என்.எம் டாக்டர் பரணிதரன், வேலூர் சி.எம்.சி மருத்துவமனை டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ்,  டாக்டர்கள் சிவனேசன், பவுல் வர்க்கீஸ் அக்ரா, அனீ ஜெனிபர் பிரபு மற்றும் நுரையீரல்துறை மருத்துவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். என்று கூறினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago