எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி.- தேனி மாவட்டம், தேனி, பெரியகுளம், க.மயிலாடும்பாறை ஆகிய ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.0.90 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரக்கூடப்பணிகள், நர்சரி-நாற்றாங்கால் ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் ரூ.0.90 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டார். தேனி ஊராட்சி ஒன்றியம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.0.60 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் பணி; முடிவுற்றதையும், ஒருங்கிணைந்த பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கழிவறை கட்டும் பணிகளையும், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.42 லட்சம் மதிப்பீட்டில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணிகளையும், நாகலாபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.83 இலட்சம் மதிப்பீட்டில் சிவலிங்கநாயக்கன்பட்டியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் கண்டமனூர் ஊராட்சியில் 14-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் 1.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், மதிய உணவுத்திட்டத்தின் கீழ் புதுராமச்சந்திராபுரத்தில் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் சமையலறை மற்றும் வைப்பறை கட்டப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் புதுராமச்சந்திராபுரத்தில் ரூ.6.30 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதையும், ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ராஜேந்திரா நகரில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப்பின் மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகஅரசு தமிழகத்தை வளமான, பசுமையான மாநிலமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் பயன்தரக்கூடிய மரக்கன்று நடவு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், போடிநாயக்கனூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாற்றுப்பண்ணைகளில் வேம்பு, புளி, அரசு, இலவம் போன்ற மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் மரக்கன்று நடவு செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராமப்புற பொதுமக்களை கழிப்பறை பயன்படுத்திட தனிநபர் கழிப்பறை கட்டுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, தனி நபர் கழிப்பறை ஏற்படுத்திட போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாத நபர்களை கண்டறிந்து பொதுகழிப்பறையினை பயன்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளை பராமரித்து சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும், கிராம ஊராட்சிகளில் பெறப்படும் மற்றும் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றிடவும், ஊராட்சிப் பகுதிகளில் சாலைகள், மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளை முறையாக பராமரித்திடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சு.வடிவேல் செயற்பொறியாளர் செல்வி.எம்.கவிதா உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ் ஞானசேகரன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதமணி பாண்டியன் சுருளிவேல் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.மலர்விழி சந்திரபோஸ் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அ.கதிரவன் அ.இளையேந்திரன் உட்பட அனைத்து செய்தியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.


