எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக் குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களின் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிப்பட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போன்றவை செல்லும் போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.
இப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாசக் குழாய்கள் சுருங்குவதால், அதன் வழியாக காற்றுச் சென்று வரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.
இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்கு கிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக மாகக் காணப்படும்.
ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய் கண்டவர்கள் பலர் இந்த நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். எனினும், ஒரு சில நேரங்களில் நோயின் தாக்கம் இருக்கும். அப்போது உரிய மருத்துவம் செய்து கொண்டு மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக் குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற சந்தர்ப்பத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.
எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பத னையும், அறிந்து கொள்ள வேண்டும். மருத்துவரும் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, உட்கொள்ள வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பார்.
நோயின் காரணங்கள் : நாம் சுவாசிக்கும் காற்று உட்பட சுற்றுச்சூழலில் காணப்படுகிறது. சில பொருட்கள், ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புகளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வா பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தோற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.
நோய்க்கான காரணங்கள் : ஈழை நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் மிகச் சரியாக இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக உள்ளது. சூழல் காரணிகளுடன் மரபியல் காரணிகளும் இணைந்தே இந்த ஈழை நோயை ஏற்படுத்துகிறது. இந்தக் காரணிகள் நோயின் தீவிரத் தன்மையையும் சிகிச்சைக்கான பலனையும் மாற்றுகின்றது. சில சூழல், மரபியல் காரணிகள் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும் வேறு பல காரணிகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளன.
மிகவும் இலகுவாக தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நுரையீரலுக்கு ஆபத்து வரக்கூடும் என்ற நிலையில் நுரையீரலுக்குச் செல்லும் காற்று வழியானது தற்காப்பு நோக்கில் சுருங்கி மூடிக் கொள்ளப் பார்ப்பதாகக் கருதப்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் வேதியியல் மூலக்கூற்று உயிரியல் பிரிவிலிருந்த புரொஃப்பெட் (Pசழகநவ) என்பவர் மனித உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதியானது ஒவ்வாமை ஊக்கிகளை (யடடநசபநளெ) தமக்கான அச்சுறுத்தலாகவே கருதுவதாகக் கூறினார்.
இதனால் ஈழை நோயானது கூர்ப்பின் வழி தோன்றிய உடலின் ஒரு தற்காப்பு இயங்கு முறையாகக் கொள்ளப்படலாம். இதன் வழி சுவாச வழிக்கான மாசுபடுத்திகள் அகற்றப்படும்போது அல்லது குறைக்கப்படும் போது இந்நோயினால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும் என்று கூறப்படுகின்றது.
சூழலியல் காரணிகள் நோய்க்கான பொதுவான காரணங்கள் :
1. ஒவ்வாமை ஊக்கிகள் (யடடநசபநளெ) - தூசு, சிற்றுண்ணிகள், மகரந்தம், பூஞ்சை
2. புகைஇலையிலிருந்து வரும் புகை, குறிப்பாக, பெண்கள் கருத்தரித்து இருக்கும்போது சிகரெட் புகைத்தலுடன் இந்நோய் தொடர்புடையதாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
3. வேலைத் தளங்களில் பயன்படும் வேதிப்பொருட்கள்
4. மாசடைந்த காற்று, வாகனங்களினால் ஏற்படும் தூய்மைக்கேடு அல்லது அதிகமான ஓசோன் அளவுகள் ஆகியவற்றின் காரணத்தினால் காற்றின் தரம் குறைகிறது. காற்றின் தரம் குறைதல் இந்நோய் உருவாதலுடனும், இந்நோயின் பாதிப்பு அதிகமாவதுடனும் தொடர்புடையதாக உள்ளது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் அதிகமான ஆராய்ச்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. காற்று மாசுப்படுத்திகளின் வெளியாக்கத்திற்கும்(எ.கா) வாகனங்களினால் ஏற்படும் தூய்மைக்கேடு) குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஈழை நோய்க்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்று சமீபத்தில் வந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஈழை நோய் ஏற்படுதல் மற்றும் குழந்தைப்பருவ ஈழைநோய் அதிகரித்தல் ஆகிய இரண்டுமே வெளியே உள்ள காற்று மாசுப்படுத்தி களினால் தான் ஏற்படுகிறது என்று இந்த ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.
மேலும் இந்நோயைத் தீவிரப்படுத்தக் கூடிய ஏனைய காரணிகளாவன.
ஆஸ்துமா தீர்க்கும் முள்ளங்கி : நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு, பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம், அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன. முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது. பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேக வைப்பது போல முள்ளங்கிப் பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும். தசிறுநீர் பிரச்சினை தீரும்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. சிறுநீர்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது. சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்க லாம். முள்ளங்கி கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது.
உணவு கட்டுப்பாடு மற்றும் சேர்க்கைகள் : குறைந்த அளவு வைட்டமின் சி நுரையீரல் செயலிழப்போடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது மற்றும் வைட்டமின் சி உட்கொள்வதை அதிகரிப்பத னால் ஆஸ்துமா நோயுடைய மக்களின் நுரையீரல் செயல்பாடு அதிகரிக் கிறது. இது உடற்பயிற்சி மூலம் ஏற்படும் ஆஸ்துமாவை தடுக்க உதவு கின்றது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது. டெக்லென்பர்க் நடத்திய ஆராய்ச்சியில் ஒரு நாளைக்கு 1500 மில்லி கிராம் அஸ்கோர்பிக் அமிலம் எனும் அடிப்படையில் 2 வாரங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பொதுவான (-14.3+1.6மூ) மற்றும் பிளாசிபோ உணவு கட்டுப்பாடோடு (-12.9+2.4மூ) ஒப்பிடும் போது உடற்பயிற்சிக்கு பின்னான கநஎ1(-6.4+2.4மூ) அதிகப்படியாகக் குறைக்க உதவுகின்றது என ஆராய்ச்சியின் முடிவு காண்பிக்கின்றது.
பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாடு ஒப்பிடும் போது அஸ்கோர்பிக் அமில உணவு கட்டுப்பாடு, ஆஸ்துமா அறிகுறிகளை குறிப்பிடத்தக்க வகையில் சீர் செய்கிறது உடற்பயிற்சிக்கு பின்னான குநுNழுஇ டுவுஊ4-நு4 மற்றும் 9யஇ 11டீ-Pபுகு2 அளவுகள் பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக (pஈ0.05) இருந்தது. முடிவுகள் சாதகமாக இருந்த போதும் ஆஸ்துமா தாக்கத்தின் வீரியத்தை வைட்டமின் சி மட்டும் குறைக்கும் என்று கூறிவிட முடியாது. ஆஸ்துமா உள்ள மக்களுக்கு வைட்டமின் சி பரிந்துரைக்கப்படுவதற்கு முன் பெரிய மற்றும் வலுவான ஆய்வுகள் தேவைப்படுகின்றது.
ஆஸ்துமா சிகிச்சையில் மெக்னீசியம் மற்றும் செலினியம் சேர்க்கை களில் பங்கு பற்றி அறிய மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. மிகத் தீவிரமான ஆஸ்துமா நோயாளிகளில் மரபு சார்ந்த சிகிச்சையோடு கூட கூடுதலாக மெக்னீசியம் சல்ஃபேட் நரம்பு வழி சிகிச்சை அளிக்கப்படும் போது மூச்சுக் குழாய் தளர்ச்சி அடையும் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை : அறிகுறிகளை சமாளிக்கவும் வருமுன் கண்காணிக்கவும் அதற்கேற்ற குறிப்பிட்ட திட்டங்களை வகுக்கும் வகையில் மருத்துவர் மற்றும் நோயாளி (குழந்தை அல்லது வயது வந்தவராக இருந்தாலும்0 ஆகியோரி டையே உறவு முறையை உருவாக்குவது ஆஸ்துமாவை கட்டுப்படுத்து வதில் உள்ள மிக முக்கியமான படியாகும். எதை அடைய வேண்டும் என்பதை ஆஸ்துமா உள்ள ஒரு நபர் புரிந்து கொண்டுள்ளார். (மற்றும் முடிவெடுப்பதில் சரியான பங்கு எடுக்கிறார்) என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும். அடைய வேண்டியவற்றில் ஒவ்வாமை உருவாக்கும் பொருட்களுக்கு வெளிப்படுவதை குறைத்தல் அறிகுறிகளின் தீவிரத்தை அறிந்து கொள்ள மருத்துவ சோதனைகளைச் செய்து கொள்வது மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்வதும் கூட உள்ளடங்கும். சிகிச்சை திட்டம் எழுதப்பட்டும் ஒவ்வொரு வருகையின் போதும் ஆலோசனை செய்யப்பட்டு மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து மாற்றப்பட வேண்டும்.
செல்ல பிராணிகள் அல்லது ஆஸ்பிரின் போன்ற தூண்டும் பொருட்களைக் கண்டறிந்து அவற்றுக்கு வெளிப்படுதலை குறைத்தல் அல்லது தவிர்த்தல் ஆகியவை ஆஸ்துமாவிற்கு அளிக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த சிகிச்சையாகும். தூண்டுதலை தவிர்த்தல் போதுமான அளவிற்கு இல்லாமல் இருந்ததானால், மருத்துவ சிகிச்சையை நாடலாம். உணர்ச்சி நீக்கம் குணமாக்கக் கூடியதாக இருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக சில நோயாளிகள் புடேகோ முறையின் மூலம் தங்கள் சுவாச பழக்கங்களை மாற்றி அமைத்து தங்களது அறிகுறிகளைப் போக்கியுள்ளனர்.
நிவாரண மருந்து, அதிக நேரம் செயல்படக் கூடிய டீ2- இயக்கிகள் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்டவை மற்ற சிகிச்சை முறைகளாகும்.
தொகுப்பு: டாக்டர் ஆர்.பாலாஜி, தொடர்புக்கு : செல் : 94871 61797. விக்னேஷ் மருத்துவமனை,
220ஃ135. 2-வது அக்ரஹாரம், சேலம் - 636001.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி திடீர்துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் காயம்
11 May 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.