எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
							
						Source: provided
சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம் பயிர் நோயியல் துறை முனைவர் அ.சுதா பயிர் பாதுகாப்பில் உயிர்எதிர்கொல்லிகளின் பயன்பாடு பற்றி கூறுகையில், இரசாயனக் கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன.
மேலும், அம்மருந்துகள் விட்டுச் செல்லும் எஞ்சிய நச்சு மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே பயிர் பாதுகாப்பானது, இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமலும், பூச்சி மற்றும் நோய்களில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தாமலும், நன்மை தரும் பூச்சி மற்றும் நுண்ணுயிரிகளை அழிக்காமலும் இருக்க வேண்டும். ஆனால் உயிர் எதிர்கொல்லிகளை பயன்படுத்துவதால் அத்தகைய சூழ்நிலை சீர்கேடு ஏற்படுவதில்லை. அதுமட்டுமின்றி பூச்சி மற்றும் நோய் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை. அத்துடன் இவை பயிர் வளர்ச்சியையும் அதிகரித்து விளைச்சலையும் அதிகரிக்கிறது.
சூடோமோனாஸை பயன்படுத்தும் முறையில் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைக்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கலவை என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும். வடித்த தண்ணீரை நாற்றங்காலில் ஊற்றி விடவும். சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 2.5 கிலோவை 2.5 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஒரு எக்டர்க்கு தேவையான நாற்றுகளை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து நட வேண்டும்.
நீண்ட நேரம் ஊற வைப்பதால் அதன் செயல் திறன் கூடுகிறது. நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து இட வேண்டும். சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சத கரைசலை நடவுக்கு பின்னர் 45 நாட்கள் கழித்து நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.
சூடோமோனாஸை பயன்படுத்தும் முறையில் கேழ்வரகு குலை நோய்க்கு சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.2 சத கரைசலை நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். சூடோமோனாஸை பயன்படுத்தும் முறையில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி மற்றும் பயறு வகைப் பயிர்கள் வேரழுகல் மற்றும் வாடல் நோய்க்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.
மேலும் டிரைகோடெர்மா என்ற பேரினத்தில் வெவ்வேறு வகை சிற்றினங்களான டி, விரிடி, டி ஹார்சியானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
டிரைகோடெர்மா பயன்படுத்தும் முறையில் காய்கறிப் பயிர்களில் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகலுக்கு காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய் மற்றும் பூசணி பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா பூசண கலவையை கலந்து பின்னர் விதைக்க வேண்டும்.
மேலும் காய்கறிப் பயிர்களில் வேரழுகல் மற்றும் வாடல் நோய்க்கு ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைகோடெர்மா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்பு நிலத்தில் இட வேண்டும். மேலும் டிரைகோடெர்மா பூசண கலவை 2.5 கிலோவை தேவையான அளவு தண்ணீரில் கலந்து ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை அந்த கலவையில் குறைந்தது 30 நிமிடம் நனைத்து பின்னர் நடவேண்டும்.
டிரைகோமெர்மா பயன்படுத்தும் முறையில் மஞ்சள் கிழங்கு அழுகலுக்கு மஞ்சள் கிழங்கு விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியை கலந்து விதைக்க வேண்டும். மேலும் வயலில் இடும் முறையில் ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைகோடெர்மா பூசண கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து நடுவதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.
டிரைகோடெர்மா பற்றிய பயிற்சி பல்கலைக் கழகத்தில் நோயியல் துறையில் தேவையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. டிரைகோடெர்மா பூசண கலவையை மற்ற பூசணக் கொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துடன் கலத்தல் கூடாது. இந்த பூசண கலவையை தயாரித்த நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இந்த பூசண கலவையை மற்ற உயிர் உரங்களுடன் கலந்து இடலாம். இந்த பூசணம் சில பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்து.
இது ஒரு சிக்கனமான முறை, இது பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கச் செய்கிறது. இது விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசணத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது பயிர்களின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. இது மண்ணிலுள்ள கனிம பொருட்களைப் பயன்படுத்தி பல மடங்காக பெருகி செடிகளுக்கு பாதுகாப்பை நீண்ட காலத்திற்கு தருகிறது. இது தவிர உயிரினங்களுக்;கும் தோட்டத்தில் உள்ள மண்புழுக்களுக்கும் தீமை விளைவிப்பதில்லை.
மேலும் விவரங்கள் பெற சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம், தொலைபேசி 0427 2422550 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். 
தொகுப்பு: முனைவர் அ.சுதா (பயிர் நோயியல்) 
முனைவர் ப.கீதர் (திட்ட ஒருங்கிணைப்பாளர்)
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
 -   
          
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 -   
          
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 -   
          
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
 -   
          
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
 -   
          
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
 -   
          
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
 -   
          
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
 -   
          
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
03 Nov 2025தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 -   
          
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது: இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள கனடா திட்டம்
03 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று நிலைப்பாட்டை அடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவு குறித்து கனடா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
 -   
          
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
 


