முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வண்டலூர் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அருகில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.27 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.

அரசு சார்பில் ...

எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையிலும், அவர் ஆற்றிய பணிகள், அவர் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் மிக சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதன் தொடக்கவிழா, கடந்த ஜூன் 30ம் தேதி மதுரையில் நடைபெற்றது.

அதனைதொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்தும், அரசின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தார்.

மாணவர்கள் ...

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் மாவட்டங்களில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் மற்றும் அரசியல் மூலம் அவர்கள் ஆற்றிய சமூகத்தொண்டு, சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் பற்றியும் பள்ளி மாணவ,மாணவிகள் அறிந்திடும் வகையில் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை விழாவின்போது பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், எம்.ஜி.ஆர். பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்படங்களும் கிராமப்புறங்களில் ஒரு வார காலம் மின்னணுதிரை மூலம் திரையிடப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர், கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா இன்று மிக சிறப்பாக நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.

புதிய திட்டப்பணி...

விழாவிற்கு சட்டப்பேரவை சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரை ஆற்றுவார். துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எம்.ஜி.ஆரின் படத்தினை திறந்து வைத்து, ரூ.75.81 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள 58 திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.27.34 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கி விழா பேருரையாற்றுவார்.

அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த விழாவில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், திண்டுக்கல் சி. சீனிவாசன், பி. தங்கமணி, எம்.சி. சம்பத், ஓ.எஸ். மணியன், சேவூர் எஸ். ராமச்சந்திரன், எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் உள்பட அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் , மாவட்ட செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், பரங்கிமலை ஒன்றிய செயலாளர் என்.சி. கிருஷ்ணன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய அவைத்தலைவர் வி. ரகுராமன், முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனூர் வி. பக்தவச்சலம், கே.யு.எஸ். சோமசுந்தரம், மாணவரணி செயலாளர்கள் வி. வள்ளிநாயகம், செம்பாக்கம் ஜி.எம். சாந்தகுமார், தாம்பரம் நகர செயலாளர் எம். கூத்தன், மாவட்ட பிரதிநிதி பி.கே. பரசுராமன் உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

மாவட்ட கலெக்டர் பொன்னையா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா. வெங்கடேசன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் பெ. மனோகரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் அ.பொ.முனியாண்டி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் வரவேற்புரையாற்றுவார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நன்றியுரை ஆற்றுவார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் அமைச்சர்கள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து