முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்தில் சீர்திருத்தம் செய்ய முடிவு

புதன்கிழமை, 30 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  இந்திய ராணுவத்தில் அதிரடியாக சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள மத்திய ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
உலக சூழ்நிலை மாறி வருகிறது. ஒரு குட்டி நாடு கூட அணுஆயுத உற்பத்தியில் இறங்கியுள்ளன. அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் நாடுகள் தங்களது ராணுவத்தை பெருக்கிக்கொண்டு இந்தியாவை மிரட்டி வருகின்றன.

மேலும் சீனா-இந்தியா இடையே சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லைப்பகுதி உள்ளது. இந்த எல்லைப்பகுதியில் அடிக்கடி ஏதாவது ஒரு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி வருகிறது. அடிக்கடி இரு நாடுகளிடையே மோதல் போக்கும் உருவாகிறது.  அதே மாதிரி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பாகிஸ்தானோ காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி ஊடுருவி வருவதோடு தீவிரவாதிகளின் ஊடுருவலை ஊக்குவித்து வருகிறது. 

இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படாதபடி நமது ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ராணுவத்தில் சீர்திருத்தும் செய்வது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஷெகத்கர் தலைமையில் கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. இந்த கமிட்டியானது நமது ராணுவத்தில் சீர்திருத்தம் மற்றும் போர் திறமையை அதிகரிக்கும் வகையில் 99 சிபாரிகளை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இதில் 65 சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த சிபாரிசுபடி ராணுவத்தில் 57 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டத்தில் சீர்திருத்தம் உள்பட கமிட்டியின் 65 சிபாரிசுகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் என்று ராணுவ அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ராணுவ அமைப்புகள் மற்றும் என்.சி.சி.யில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. கமிட்டியின் சிபாரிசுகளை நிறைவேற்ற ராணுவ அமைச்சகம் முடிவு செய்திருப்பதை மத்திய கேபினட் அமைச்சரவை நேற்று ஆய்வு செய்தது. ஆய்வுக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அருண்ஜெட்லி மேற்கண்டவாறு கூறினார்.

ராணுவத்தில் சீர்திருத்தங்களை வரும் 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கவும் காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் 31 ஆயிரம்  ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள். சப்ளை மற்றும் போக்குவரத்து முறையிலும் மாற்றம் செய்யப்படும் என்று அருண்ஜெட்லி மேலும் கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து