முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோயின் நிலை அதிகமாகாமல் தடுக்கும் இயன்முறை மருத்துவத்தின் சிறப்பு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      மருத்துவ பூமி
Image Unavailable

Source: provided

இயன்முறை மருத்துவம் ஆங்கிலத்தில் Physiotherapy (பிசியோதெரபி) என்று கூறுவார்கள். உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும்போது, ஏற்படும் நோய்களை ஆராய்ந்தறிந்து, அந்த நோயின் நிலை அதிகமாகாமல் தடுக்கவும், உடலை மறுபடியும் இயக்க வைக்க, முற்றிலும் குணமடைய சிகிச்சை அளிக்கப்படும். வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியின் வாழ்க்கை முறையால் நாம் கற்ற இயற்கை மருத்துவ முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றை முற்றிலும் மறந்து விட்டோம். இதனால் நோய்கள் அண்டுவது சுலபமாகிவிட்டது.

பல்வேறு மாற்று மருத்துவம், அதாவது ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம் என்று ஒவ்வொரு துறையும் தனக்கென தனிச்சிறப்பையும் கொண்டது இந்த மாறுபட்ட மருத்துவம், இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இயன்முறை மருத்துவரான நான், MD (மாற்று மருத்துவம் படிப்பதற்கான காரணம் மக்க/ளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்காகவே.

*இயன்முறை மருத்துவம் பக்க விளைவுகள் இல்லா மருத்துவம்.

* மாற்று மருத்துவம் உடலுக்கு எந்த பக்கவிளைவுகளையும் தராது. அவசர கதியில் பயணிக்கும் ஒருவர் ஆங்கில மருத்துவம் (Allopathy) செய்ய வேண்டும். அவசர சிகிச்சையில் ஆங்கில மருத்துவம் செய்வதன் மூலமாக விலை மதிப்பற்ற உயிரைக் காக்க முடியும். இதனால் ஆங்கில மருத்துவம் உலகில் ஒரு பொதுவான மருத்துவ முறையாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் கண்டுபிடிப்பு இந்த இயன்முறை மருத்துவம். ஒருவர் ஊனமுற்றவர் ஆனாலும், கை, கால் செயல்இழப்பு இருந்தாலும் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது மீண்டும் அவர்களின் வாழ்வை திரும்பப்பெற இந்த இயன்முறை மருத்துவம், சிறந்து விளங்குகிறது.

* உலக இயன்முறை மருத்துவர்கள் தினம் செப்டம்பர் 8 கொண்டாடப்படுகிறது. வளர்ந்துவரும் மருத்துவ துறையின் ஒரு அங்கமாக முன்னேறி கொண்டிருக்கிறது.

* இயன்முறை மருத்துவர்கள் உச்சிமுதல் பாதம் வரை உள்ள அ¬ன்தது குறைபாடுக்கும், தசை, தசை நார்கள், ஜவ்வுப் பிரச்சினை, மூட்டுத் தேய்மானம், முடக்குவாதம், முகவாதம் என பக்கவாதம் அனைத்து வலிகளையும் குறைத்து குணம் அடைய செய்கிறார்கள். இயன்முறை மருத்துவரை முடநீக்கியல் நிபுணர் என்றும் அழைப்பார்கள். இவ்வளவு சிறப்புகள் மிகுந்த இயன்முறை மருத்துவத்தில், தனித்துவமான பிரிவுகளும் உண்டு.

* இதயம் சம்பந்தமான சிகிச்சை

* நரம்பு சிகிச்சை

* எலும்புக்கான சிகிச்சை

* மறு சீரமைப்பு

* பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை (பிரசவத்திற்கு முன்/பின்)

* மூளை செயல்கள் இழந்த குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை

* ஐசியு (தீவிர சிகிச்சை பிரிவு) இதில் முக்கிய பங்கு, இயன்முறை மருத்துவத்திற்கு உண்டு.

* தீ விபத்திற்கு பின்

* நுரையீரல் சம்பந்தமான பயிற்சிகள்

* தசை சிதைவு பாதிப்பு

* ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம்

* விளையாட்டுவீரர்களின் பயிற்சியில் ஈடுபடுவது

* அனைத்து அறுவை சிகிச்சைக்குப் பின் இயன்முறை மருத்துவம் உதவுகிறது.

* உடற்பயிற்சி நிபுணராகவும் (Fitness) சிறந்து விளங்குகின்றனர்.

* Facia Manipulation (முகம் கையாளுதல் நாள்பட்ட வலியை சரி செய்தல்.

* வாழ்க்கை பாணி மாற்றும் (Life Style Modification)

* மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த சிகிச்சை (Geriatric)

* நீரிழிவு நோய் மற்றும் இரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்துதலின் ஆலோசனைகள்.

இவை அனைத்திற்கும் இயன்முறை மருத்துவரிடம் மிகச் சிறந்த முறையில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்.

* நாம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பார்ப்போம்.

எலும்பு சிதைவு நோய் பெண்களை மிக அதிகமாக தாக்குகிறது. 45 வயதிற்கு மேல், உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

எலும்புகளின் அடர்த்தி குறைந்துபோவதே எலும்பு சிதைவு நோய் ஆகும். (Osteoporosis) கால்சியம் சத்து மிக அவசியம்.
நம் உடம்பின் எடையை தாங்கும் மூட்டு எலும்பு, இடுப்பு, முதுகு குருத்து எலும்பு, மணிக்கட்டு எலும்புகள் சிதைவு நோய்க்க உள்ளாகின்றனற. இவை அனைத்திற்கும், சிறு சிறு பயிற்சிகளும், ஆயுர்வேத மருந்துகளும் குணமடையச் செய்யும்.

மாதவிடாய் சுழற்சி நின்றபிறகு

(Post Menopausal Syndrome) பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுத்தும் ஹார்மோன்களின், மாற்றமே எலும்பு சிதைவு நோய்க்கு முக்கிய காரணம். இந்த சமையத்தில் பெண்ககளை அதிகம் பாதிப்பது உடல் சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை, எலும்பு சிதைவு, இந்த மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணிற்கு மிக பெரிய உடல் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது.

மாதவிடாய் நின்ற உடன் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்

எலும்புகள் சிதையும் போது அதன் வலு குறைந்து எலும்பு முறிவு ஏற்படும். எலும்புகள் படிப்படியாக அதன் வலுத்தன்மை இழப்பதால் நம்மால் காணவே, உணரவோ முடியாது. அதனால் கவனமாக, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். இவற்றில் இருந்து விடுபட

1. கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

2. மருந்துகள் மூலம் இதனை எடுத்துக் கொள்வதை விட நம் உண்ணும் உணவில்

* பால், கீரைகள், ஆரஞ்சு பழம் அனைவரும் அதாவது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சாப்பிடலாம்.

* அன்றாட அவசரக் காலகட்டத்தில் காலை வெயிலில் நாம் தென்படுவது இல்லை. சூரிய வெளிச்சம் நம் மீது படாமல் இருப்பது, எலும்பு சிதைவுக்கு முக்கிய காரணமாகிவிட்டது. காலை 7.30 மணிக்கு முன்பாக வெயிலில் நடைபயிற்சி செய்தால் வைட்டமின்&டி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதனால் எலும்பு சிதைவை வராமல் தடுக்க முடியும்.

ஹார்மோன் மாற்றத்தை சரிசெய்ய உடற்பயிற்சியும், ஆயுர்வேத அல்லது மாற்று மருத்துவத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

* உடற்பயிற்சி நம் எலும்புகளுக்கு வலுவைக் கொடுக்கிறது எலும்பு உறுதியாகவும் உதவுகிறது.

* இந்த உடற்பயிற்சி சிறிய வலியை குணப்படுத்தும்

* Stretching நீட்டிக்க பயிற்சிகள் இடுப்பு வலியையும், மூட்டு வலியையும் சிறப்பாக குறைக்கும்.

* முறையான பயிற்சி, கர்ப்பபை Position நிலை சரியாக இருக்கும்.

* பிரசவத்திற்கு பின் உள்ள கஷ்டங்கள், பலவீனம் (கருப்பையின் அனைத்தும் Core Strengthening பயிற்சியின் மூலம் சிர செய்யலாம்.
 பெண்கள் நம் நாட்டின் வீட்டின் கண்கள்ÕÕ என்று பாரதியார் சொன்னதுபோல பெண்களை பேணி பாதுகாப்போம். நம் தாயை தங்கையை மனைவியை குழந்தையை மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்.

Dr.S.Deepa thangam,  B.P.T;M.I.A.P;C.D.N.T;MD(AM)
Mobile: 9952210884
Dhivya Multispeciality Clinic
Sathuvachari, Vellore.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து