முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2026      தமிழகம்
vijay 2025-10-09

கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.

 கடந்த செப். 27-ஆம் தேதி கரூரில் த.வெ.க. தலைவா் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, கரூரில் த.வெ.க. நிா்வாகிகள், தமிழக அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா், காயமடைந்தவா்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். 

இதனிடையே, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் த.வெ.க. பொதுச் செயலா் ஆனந்த், தோ்தல் தலைமை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலா் நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில், கடந்த டிசம்பா் இறுதியில் நேரில் ஆஜரான த.வெ.க. நிா்வாகிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மூன்று நாள்கள் விசாரணை நடத்தினா். அதேபோல், கரூா் மாவட்ட ஆட்சியா் எம்.தங்கவேல், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி.செல்வராஜ், கரூா் நகர காவல் ஆய்வாளா் ஜி. மணிவண்ணன் உள்ளிட்டோரிடம் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது, பரப்புரை கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன், அவா் வருவதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் என்ன, பாதுகாப்பு ஏற்பாடுகள்? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது, கூட்டத்துக்கு எத்தனை போ் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில், வழக்கு விசாரணையின் இறுதிக்கட்டமாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வரும் ஜன.12-ம் தேதி த.வெ.க. தலைவா் விஜய் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு விமானம் மூலமாக விஜய் டெல்லி புறப்படுகிறார். கடந்த 6ம் தேதி சம்மன் அனுப்பிய நிலையில் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகிறார். மேலும், கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய் இன்று டெல்லி செல்லும் நிலையில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக த.வெ.க. கடிதம் எழுதியுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு த.வெ.க. நிர்வாகி நிர்மல்குமார் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே மத்திய ரிசர்வ் படை மற்றும் டெல்லி காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் சி.பி.ஐ. அலுவலகம் செல்லும் வழி, தங்கும் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சி.பி.ஐ. விசாரணக்காக இன்று காலை டெல்லி செல்லும் விஜய், நாளை  மாலை சென்னை திரும்ப உள்ளார். இதற்காக தனி விமானத்தில் அவர் செல்கிறார். விஜய்யுடன் த.வெ.க. நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் டெல்லி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து