முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2026      இந்தியா

திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது. இந்தியாவின் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார் என்ற ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நிகழ்வொன்றில் பேசிய ஓவைசி, "பாகிஸ்தான் அரசியலமைப்பு முஸ்லிம் அல்லாதவர்கள் உயர்பதவிக்கு வருவதைத் தடுக்கிறது. ஆனால், இந்திய அரசியலமைப்பு யாருக்கும் தடை விதிக்கவில்லை. இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த ஒரு மகள் பிரதமராக வருவார் என்பது எனது கனவு" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "அரசியலமைப்பு ரீதியாக யாரும் பிரதமராகலாம், அதில் தடையில்லை. ஆனால் இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது. இந்தியாவின் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனாவாலா இதுபற்றி பேசுகையில், "பிரதமர் பதவி பற்றிப் பேசுவதற்கு முன்பு, ஓவைசி தனது சொந்தக் கட்சியில் ஒரு ஹிஜாப் அணிந்த பெண்ணையோ அல்லது இஸ்லாமியர்களில் பஸ்மாந்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையோ தலைவராக்கிக் காட்டட்டும்" என்று சவால் விடுத்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து